‘ரிட்டயர்டு’ கருணா... ‘பிரஷர்’ ஸ்டாலின்... ‘குஷி’ இளங்கோ... ‘சுனாமி’காந்த்... ‘ட்ராமா’தாஸ்!

அ.தி.மு.க மேடைகளில் நடிகை விந்தியா  பேசும் பேச்சுக்கள் செம ஹாட். 

ஜு.வி-க்காக அவரை சந்தித்தபோது, ஒவ்வொரு தலைவரையும் கட்டம்கட்டி சகட்டுமேனிக்கு விமர்சித்து விளாசித்தள்ளினார்.

கருணாநிதியின் டைமிங், ரைமிங் ட்ராமா..!

‘‘அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதி எப்படி முதல்வரானார்? புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., நட்புக்காக கருணாநிதிக்கு போட்ட பிச்சை, முதல்வர் பதவி. எம்.ஜி.ஆர்கூட நட்பாக இருக்கின்றவரைக்கும் முதல்வரா இருந்தார். எப்போ பகைச்சாரோ அப்போது இருந்து எம்.ஜி.ஆர் இறக்கிறவரை எதிர்க் கட்சித் தலைவர். அம்மாவை எதிர்த்தபிறகு அந்த எதிர்க் கட்சிப் பதவியும் இல்லாமப் போச்சு. சிட்டிபாபு, பி.டி.ஆர்., தமிழ்க்குடிமகன், தா.கிருஷ்ணன், ஆலடி அருணா எல்லாம் தி.மு.க-வுக்காக கடைசிவரை உழைச்சு செத்துப் போனாங்க. அவங்க குடும்பத்துல இருந்து எத்தனை பேர் எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரியாகி இருக்காங்க? ஆனா, கருணாநிதி குடும்பத்தில இருந்து எத்தனை எம்.பி., எத்தனை மினிஸ்டர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்