“எம்.எல்.ஏ. சீட் வேணுமா?”

திவாகரன் பெயரில் வசூல் நடத்திய மோசடிக் கும்பல்!

தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்பமனுக்கள் வாங்கி வருகிறது அ.தி.மு.க. தலைமை. இன்னொருபுறம் மன்னார்குடியில், ‘விருப்பமனு இல்லாமலேயே தேர்தலில் போட்டியிட திவாகரன் சீட் வாங்கித் தருகிறார்’ எனச் சொல்லி பணம் பறித்த கும்பலை காவல் துறையினர் கைதுசெய்திருக்கின்றனர். இந்தக் கும்பலின் பின்னணியில் ‘அண்ணனுக்கு வேண்டப்படாதவர்கள் இருப்பதாக’ திவாகரன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். 

இதுகுறித்து புகார் கொடுத்த திருச்சியைச் சேர்ந்த கார்த்திகேயன், “அரவக்குறிச்சியைச் சேர்ந்த ஆஷிகா பேகம் என்பவர், திவாகரன் மூலம் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித்தருவதாகச் சொன்னார். எனக்குத் தெரிந்த மன்னார்குடி நண்பர்களிடம் நான் விசாரித்தபோது, ‘திவாகரன் அவ்வாறு செய்வதில்லை. நீ யாரிடமும் பணம் கொடுத்து ஏமாந்துவிட வேண்டாம்’ என்று சொன்னார்கள். எனவே, அந்தக் கும்பலை வளைத்துப் பிடிக்கத் திட்டமிட்டோம். பட்டுக்கோட்டை சாலையில், காரில் வந்த ஆஷிகா பேகம், அவரது கணவர் சாதிக் பாட்ஷா இருவரையும் நானும், எனது நண்பர் சரவணனும் சந்தித்தோம். ‘10 லட்சம் பணம் கொடுங்கள்’ என்று கேட்டார்கள். ‘திவாகரனிடம் நேரில் அழைத்துச் சென்றால்தான் பணம் கொடுப்போம்’ என்று நாங்கள் சொன்னோம். அப்போது இன்னொரு காரில் வந்த சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த அமர்நாத், அரும்பாக்கம் சவுந்தர்ராஜன், சூளைமேடு சுரேஷ் ஆகியோரைக் காண்பித்து, ‘இவர்களும் தேர்தலில் போட்டியிட சீட்டுக்காகப் பணம் கொடுத்​திருக்கிறார்கள். ஏன் தயங்குகிறீர்கள்’ என்று சொன்னார்கள். பேசிக்​கொண்டிருக்கும்போதே, திவாகரனின் ஆதரவாளர்களுக்குத் தகவல் கொடுத்தோம்” என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்