சீர்கெட்டு வரும் ஏலகிரி மலை!

ஏக்கத்தில் சுற்றுலா பயணிகள்...

ழைகளின் ஊட்டி என்று அழைக்கப் படும் ஏலகிரி, கொள்ளை அழகு கொண்ட ஒரு சுற்றுலாத்தலம். ஆனால், கண்ட இடமெல்லாம் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகள் என சுகாதாரச் சீர்கேடுகளால், மிகுந்த எதிர்பார்ப்போடு வரும் சுற்றுலாப் பயணிகள் சோகத்தில் ஆழ்ந்துவிடுகிறார்கள்.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள ஏலகிரி மலை, 30 சதுர கிலோ மீட்டர் பரப்புகொண்டது. இந்த மலையில் உள்ள நிலாவூர் ஏரி, இயற்கைப் பூங்கா, சிறுவருக்கான பூங்கா, புங்கானூர் ஏரி, முருகன் கோயில், தொலைநோக்கு இல்லம் உள்ளிட்ட இடங்களைச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் ரசிக்கின்றனர். இந்த நிலையில், ஏலகிரி மலையில் பல்வேறு வசதிகள் குறைந்து வருவதாலும், சுகாதாரச் சீர்கேட்டினாலும் அதன் அழகு மாசடைந்து வருவதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்