சூரியன் உதிக்கும் மாநிலத்தில் அஸ்தமனம் ஆன ஜனநாயகம்!

அருணாசல் அரசு கலைப்பின் பின்னணி!

ந்தியாவில் முதலில் சூரியன் உதிக்கும் மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில், குடியரசு தினத்தன்று ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

மாநில விவகாரம் குறித்து ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருப்பதால், மாநிலத்தின் சட்டமன்றம் கலைக்கப்படவில்லை. அதன் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை வைத்து, ஆளுநர் ஆடுபுலி ஆட்டம் ஆடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் என்ன நடக்கிறது. ஒரு சின்ன ரீவைண்ட் காட்சி...

2014-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்தோடு காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. நபம் துகி முதல்வர் ஆனார். சில மாதங்களிலேயே ஆட்சிக்கு எதிராக  நிதி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் காலிகோ பால் குற்றம் சாட்டினார். இதனால் அமைச்சரவையில் இருந்தும், கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.  இருப்பினும் நீதிமன்றத்தில் தடைபெற்று காங்கிரஸில் தொடர்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்