கழுகார் பதில்கள்!

தாமஸ் மனோகரன், புதுச்சேரி-4.

 மு.க.அழகிரி - மு.க.ஸ்டாலின் கூட்டணி ஏற்படுமா?


 எத்தனை கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் ஏற்படாது.

மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.

 இன்றைய சூழ்நிலையில் துணிச்சல்மிக்க அரசியல்வாதி என்று யாரைச் சொல்வீர்கள்?


 பழ.கருப்பையாதான்.

ஆடு, மாடுகளை மேய்ப்பதைப்போலத் தொண்டர்களை மேய்க்கிறார் ஜெயலலிதா, அவரிடம் மட்டுமே அனைத்து அதிகாரங்களும் குவிந்துள்ளன, இந்தக் கட்சியில் இருப்பது எனக்குச் சிரமம் ஆனது, குனிந்து வளைந்து கும்பிடுவது எனக்கு ஏற்புடையது அல்ல, அமைச்சர்களே ஹெலிகாப்டர்களைப் பார்த்து கும்பிடுகிறார்கள், அதிகாரிகளும் அமைச்சர்களும் கைகோத்துச் செயல்பட்டு கொள்ளை அடித்து பங்கு பிரித்துக் கொள்கிறார்கள், எல்லாவற்றிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது... இப்படி எல்லாம் பேட்டி தர ஒரு மனிதனுக்குத் துணிச்சல் வேண்டும். அதைவிட முக்கியமாக, ‘லஞ்சத்தைத் தவிர்க்க முடியாவிட்டால் லஞ்ச வரி போட்டுவிடுங்கள்’ என்றும் சொல்லி இருக்கிறார் பழ.கருப்பையா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்