பெரியோர்களே... தாய்மார்களே! - 60

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

காரைக்குடிக்கு வந்த காந்தி, அதற்கு அருகில் இருக்கும் சிராவயலில் தனது பெயரால் இருக்கும் ஆசிரமத்தைப் பார்க்க வந்தார். அது 1927-ம் ஆண்டு.

தன்னைத் தேடி காந்தியே வந்துவிட்டதைப் பார்த்து அந்த இளைஞனுக்குப் பரவசம் ஏற்படவில்லை. அதற்குச் சில நாட்களுக்கு முன் சபர்மதி ஆசிரமத்தில் நோயால் துடித்த கன்றுக்குட்டியை ஊசி போட்டுக் கொன்று விடலாம் என்று அனுமதி தந்த காந்தியின் மீது கோபம் கொண்டவனாக அந்த இளைஞன் இருந்தான். காந்தியைப் பார்த்ததும், ‘ஏன் அப்படிச் செய்தீர்கள்?’ என்று அந்த இளைஞன் சண்டை போட்டான். அதே போல், ‘வர்ணாசிரம தர்மம் பற்றி நீங்கள் எழுதுவது சரியல்ல’ என்றும் அந்த இளைஞன் அவரிடம் விவாதித்தான். அனைத்துக்கும் பொறுமையாக விளக்கம் அளித்த காந்தி, ‘‘உங்களுக்குச் சொத்து எவ்வளவு இருக்கிறது?” என்று கேட்டார். காசை மதிக்காத காந்தி, ஏன் அப்படிக் கேட்டார் என்று தெரியவில்லை.

உடனே அந்த இளைஞன், ‘‘இந்தியாதான் என் சொத்து” என்றான். ‘‘இல்லை, இல்லை நீங்கள்தான் இந்தியாவின் சொத்து” என்றார் காந்தி.

அந்த இளைஞன்தான், பிற்காலத்தில் தோழர் ஜீவாவாக தமிழகத்தில் வலம் வந்த தலைவர் ஜீவா.

பல ஆண்டுகள் கழித்து நடந்த நிகழ்வு இது.

ஒரு பள்ளித் திறப்பு விழாவுக்காக வந்த  முதலமைச்சர் காமராஜர் அன்றைய செங்கல்பட்டு ஆட்சியர் கா.திரவியத்துடன் ஜீவாவின் குடிசைக்கு வந்தார். ‘‘எவ்வளவு நாளைக்கு இதே குடிசையில் இருப்பது?” என்று கேட்டார் முதலமைச்சர் காமராஜர். ‘‘மக்கள் எல்லாம் மாடி வீட்டில் வாழும்போது நானும் மாடி வீட்டில் வாழ்வேன்” என்றார் ஜீவா. சிரித்துக்கொண்ட முதல்வர், ‘‘பக்கத்தில் பள்ளிக்கூடம் திறக்க வந்தேன். என்னோடு நீங்களும் வாருங்கள்” என்று அழைத்தார். ‘‘முன்னால போங்க... நான் வர்றேன்” என்றார் ஜீவா. ‘‘ஏன் என்னோட வந்தால் என்ன? கார்ல வாங்க” என்றார் முதல்வர். ‘‘வேட்டியும் சட்டையும் கொடியில காயுது. காய்ந்ததும் எடுத்துப் போட்டுட்டு வர்றேன்” என்றார் ஜீவா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்