“அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு கட்சிகளும் துரோகம் இழைத்துவிட்டன!”

கொந்தளிக்கும் ஆசிரியர்கள்

‘‘மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தையும் ஆசிரியர் தகுதித் தேர்வையும் ரத்துசெய்ய வேண்டும், ஆங்கிலவழிக் கல்வியை ஊக்கப்படுத்தக் கூடாது என்பது உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 30, 31, பிப்ரவரி 1 ஆகிய மூன்று நாட்கள் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

பொதுத்தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், ஆசிரியர்களை வீதிக்கு வந்து போராட வைத்துள்ளது தமிழக அரசு. தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ) இந்தப் போராட்டத்தை நடத்தியது. ‘‘அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே ஆசிரியர்களுக்குத் துரோகம் செய்து விட்டன’’ என்று கொந்தளிக்கின்றனர் ஆசிரியர்கள்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலாளர் பாலசந்தர்,  மாநிலத் தலைவர் மோசஸ், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் சுரேஷ் ஆகியோரிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்