மேக்கேதாட்டூ... ஜல்லிக்கட்டு... கெயில்!

ல்லிக்கட்டுக்கு மல்லுக் கட்டியும் வாடிவாசலை காளைகள் தாண்டாததால், வாடிப்போனார்கள் தமிழர்கள். இரண்டு வாரம்கூட முடியவில்லை ‘கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய் பதிக்க அனுமதி’ என அடுத்த இடியை இறக்கி யிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

கேரளத்தின் கொச்சியிலிருந்து கர்நாடகத்தின் மங்களூர் வரை 871 கி.மீ. தூரத்துக்குக் குழாய் மூலம் எரிவாயு எடுத்துச் செல்லத் திட்டமிட்டது மத்திய அரசின் கெயில் நிறுவனம். தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் 310 கி.மீ தூரத்துக்கு எரிவாயுக் குழாய் பதிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அனுமதி பெறாமல் நிலங்களில் குழாய் பதிக்கப்பட்டபோது கொதித்து எழுந்தார்கள் விவசாயிகள். இதனால் திட்டத்துக்குத் தடை விதித்தது தமிழக அரசு. உடனே சென்னை உயர் நீதிமன்றத்தை கெயில் அணுக... கெயிலுக்கு ஆதரவாக 2013-ல் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்குப் போன தமிழக அரசுக்கு எதிராகவே தீர்ப்பு எழுதியிருக்கிறது உச்ச நீதிமன்றம். திட்டம் செயல்பட அனுமதி வழங்கியிருக்கிறது.

‘வாக்குகளைப் பெற விவசாயிகளைத் தூண்டி​விட்டு கெயில் போன்ற தேசியத் திட்டங்களைத் தடுக்கக் கூடாது. இது 3 மாநிலங்களுக்குப் பயன் அளிக்கும் திட்டம். உண்மையிலேயே விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்றால், கூடுதல் இழப்பீடு வாங்கித் தர முயலுங்கள்’ எனச் சொன்ன நீதிமன்றம், ‘மத்திய அரசு வரையறுத்த சட்டத்தின் கீழ் அமல்படுத்தும் திட்டத்தைத் தடுத்து நிறுத்த மாநில அரசுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. அப்படி தடுத்து நிறுத்த முயற்சிப்பது அரசியல் சட்டத்துக்கும், அரசு எந்திரத்​துக்கும் இடையூறு ஏற்படுத்தும் செயலாகும்’ எனவும் சொல்லியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்