“அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் அ.தி.மு.க-வின் துணை அமைப்பா?

நியாயமில்லாத நியமனங்கள்...

‘‘அரசு அலுவலர்களைத் தேர்வுசெய்வ தற்கான தன்னாட்சி அதிகாரம் கொண்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (டி.என்.பி.எஸ்.சி.) அ.தி.மு.க-வின் துணை அமைப்பாக மாற்றி விட்டார்கள்’’ எனக் கொந்தளிக்கிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள். டி.என்.பி.எஸ்.சி-க்கான 11 புதிய உறுப்பினர்களின் நியமனம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

கட்சி சார்பு இல்லாதவர்களையும், கல்வியாளர்களையும்தான் டி.என்.பி.எஸ்.சி-யின் பொறுப்புகளில் நியமிப்பார்கள். இதற்கு முன்பாக நடந்த நியமனங்களில் ஓரளவுக்கு பூசிமொழுகல்கள் இருந்தது உண்டு. இப்போது, ஆளும் கட்சி உறுப்பினர்களை நியமித்து, விதிமுறைகளை அப்பட்டமாக மீறியுள்ளனர். டி.என்.பி.எஸ்.சி-க்கு ஒரு தலைவர், 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இதில், 10-க்கும் மேற்பட்ட உறுப்பினர் பணியிடங்கள் 2013-ம் ஆண்டு முதல் காலியாகக் கிடந்தன. தேர்தல் நெருங்கும் நேரத்தில் திடீரென 11 உறுப்பினர்களை நியமித்து உள்ளனர். இதில் 7 பேர் வழக்கறிஞர்கள். இந்த நியமனத்தை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டி ருக்கிறது. புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் யார் யார்..? அவர்களின் பின்னணி என்ன?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்