கழுகார் பதில்கள்!

ஜி.வி.மனோ, தூத்துக்குடி-3.

 ‘தி.மு.க ஆட்சி அமைந்தால் அரசியலில் போலீஸ் தலையீடு ஒழிக்கப்படும்’ என்று ‘நமக்கு நாமே’ பிரசாரத்தில் ஸ்டாலின் சொல்லி இருக்கிறாரே?


 ‘அடுத்து நம்ம ஆட்சிதான்’ என்று இப்போதே சில போலீஸ் அதிகாரிகள் ரகசியச் சிரிப்பு சிரித்து வருவது ஸ்டாலினுக்குத் தெரியுமா? ‘நான்தான் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி’, ‘நான்தான் சென்னை கமிஷனர்’ என்று இப்போதே போஸ்டிங்க்ஸ் போட்டு அது பேப்பரில் வந்ததுபோல எல்லாம் கனவு கண்டு மிதக்கிறார்களாம்.

ஸ்ரீராம், சேலையூர்.


 ‘லயோலா கல்லூரி கருத்துக்கணிப்புக்காகப் பணம் கைமாறி, வேண்டியவர்களுக்கு விரும்பியபடி சொல்ல வைக்கப்பட்டு உள்ளது’ என்று டாக்டர் ராமதாஸ் சொல்லி இருக்கிறாரே?


 முதலில் அது லயோலா கருத்துக்கணிப்பு அல்ல. முதலில் ரிலீஸ் செய்யப்பட்டது, லயோலாவின் முன்னாள் மாணவர்கள் எடுத்தது. லயோலாவில் பேராசிரியராக இருந்த ராஜநாயகம் இப்போது பணியில் இல்லை. அவரும் தனிப்பட்ட முறையில் கருத்துக்கணிப்பு எடுத்து வருகிறார். இதில் பணம் கைமாறி உள்ளது என்றால், அதற்கான ஆதாரத்தை ராமதாஸ்தான் வெளியிட வேண்டும்.

சூர்யா ஸ்ரீதர், காஞ்சிபுரம்.

 சசிகலா தேர்தலில் நின்றால், அ.தி.மு.க இன்னும் அபார வெற்றி பெறுமாமே?


 இப்படி யாருக்கும் ஆசை வந்துவிடக் கூடாது என்பதால்தான் சசிகலா, கடந்த அ.தி.மு.க பொதுக்குழுவுக்கே வரவில்லை. வரவழைக்கப்படவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்