மிஸ்டர் கழுகு: தி.மு.க. + தே.மு.தி.க. + பி.ஜே.பி. - “ஸ்டாலின் முதல்வர்!”

சுவாமி அஸ்திரம்... அமித்ஷா தந்திரம்... மிரளும் ஜெ.

ழுகாருக்கு சுவாமியின் ட்விட்டர் தகவலை அனுப்பிவிட்டுக் காத்திருந்தோம். அதற்கு ஸ்மைலி சிம்பல், அழுகை சிம்பல் இரண்டையும் அனுப்பி இருந்தார் கழுகார். கேள்விக்குறியைப் பதிலாகப் போட்டோம். ‘வெயிட்’ என்று செய்தி அனுப்பிவிட்டு அது வந்து விழுவதற்குள் நம் முன் ஆஜர் ஆகிவிட்டார் கழுகார்.

‘‘தேர்தல் மேகங்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டு இருக்கின்றன. இந்த வாரத்தில் பரபரப்பு கிளப்பியது சுவாமியின் ட்விட்டர் தகவல்தான். ‘ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தி.மு.க தயாராக இருந்தால் விஜயகாந்த்தை அழைத்துவர பி.ஜே.பி தயார். மூவரும் இணைந்து கூட்டணி அமைக்கலாம்’ என்ற தொனியில் அமைந்து இருந்தது சுவாமியின் அஸ்திரம்.”

‘‘இது என்ன புதுக்கதை?”

‘‘கதை அல்ல, நிஜம். கடந்த 29-ம் தேதி இரவு சென்னை வந்தார் சுவாமி. 30-ம் தேதி கொச்சி சென்றுவிட்டு அன்று மாலையே சென்னை திரும்பினார். மறுநாள், 31-ம் தேதி முழுவதும் சென்னையில் முகாமிட்டிருந்தார். கிராண்ட் சோழாவில் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டார். அங்கு சிலரை ரகசியமாகச் சந்தித்தார். தமிழ்நாட்டில் அரசியல் நிலைமைகளை உன்னிப்பாகக் கவனித்தார். சாதக, பாதகங்களை அலசினார். நான்கு கட்சிகள் மட்டும்தான் அவரது விசாரணை வளையத்தில் இருந்துள்ளன.”

‘‘எவை எவை?”

‘‘அ.தி.மு.க., தி.மு.க, பி.ஜே.பி., தே.மு.தி.க ஆகிய நான்கு கட்சிகள் பற்றி அனைத்து விஷயங்களையும் திரட்டினார். இந்த நான்கு கட்சிகள்தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பவை என்பது சுவாமியின் கணிப்பு.”

‘‘தே.மு.தி.க-வுடன் கூட்டணிக்கு பி.ஜே.பி முயற்சித்து வருகிறதே?”

‘‘முயற்சித்து வருகிறது. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துவருகிறது. இவை இரண்டு கட்சிகள் மட்டும் போதாது என்று நினைக்கிறார் சுவாமி. குறிப்பிட்ட சில தொகுதிகளில் மரியாதைக்குரிய வாக்குகள் வாங்கலாமே தவிர, வெற்றி பெற முடியாது என்று சுவாமி நினைக்கிறார். எனவே, அ.தி.மு.க அல்லது தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்றுடன் சேர்ந்தால், மட்டுமே பி.ஜே.பி ஜெயிக்க முடியும் என்பது சுவாமியின் திட்டம். அ.தி.மு.க-வுடன் பி.ஜே.பி-க்கான கூட்டணி முயற்சிகளை மோடி சந்திப்பு, ஜெட்லி சந்திப்பு ஆகியவற்றில் பேசவே இடம் கொடுக்காத அளவுக்கு தவிர்த்துவிட்டார் ஜெயலலிதா. ‘வெள்ள நிவாரணம் தொடர்பாக நாம் கேட்ட தொகையை முழுமையாகத் தர மத்திய அரசு சம்மதித்தால், கூட்டணி பற்றி யோசிக்கலாம்’ என்றுகூட சில வாரங்களுக்கு முன் மனசு மாறினார் ஜெயலலிதா. ஆனால், வெள்ள நிவாரணத் தொகையை ஒப்புக்கு கொடுத்து முடித்துவிட்டது மத்திய அரசு.  பி.ஜே.பி-யைவிட மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும் கட்சிகளை இணைத்துக்கொண்டால் நல்லது என்று ஜெயலலிதா நினைத்தார்.
பி.ஜே.பி-யை நாம் சேர்த்துக்கொண்டால் விஜயகாந்த் நிச்சயம் தி.மு.க-வுடன் போக நாமே பாதை அமைத்ததாக அமையும் என்றும் ஜெயலலிதா நினைத்தார். எனவே, அவர் பிடி கொடுக்காமல் இருந்தார். இந்த நிலையில்தான் சுவாமியின் பார்வை தி.மு.க பக்கமாகப் போனது.’’

‘‘ஆச்சர்யம்தான்!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்