“அணுசக்தி கொள்கை மாறவேண்டும்!”

அணுசக்தி ஆணைய முன்னாள் தலைவர் ஆவேசம்!

“பிரதமர் மோடி, அணுசக்தி திட்டத்தை ஆரோக்கியமான திசையில் கொண்டு செல்வார் என்று நம்பினேன். ஆனால், நான் முட்டாள் ஆக்கப்பட்டேன். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்த திட்டம், மோடி அரசாங்கத்தால் மேலும் விரைவுபடுத்தப்பட்டு உள்ளது. ‘மேக் இன் இந்தியா’ பற்றிய தொடர்ச்சியான பேச்சு, பெரும் அச்சமூட்டுவதாக இருக்கிறது. ‘மேக் இன் இந்தியா’ தவறானது என்பதற்கு, கூடங்குளமே மிகச்சிறந்த உதாரணம். கூடங்குளம் அணுஉலை மிகப் பெரிய ஆபத்துக்குரியது என்பது ஒருநாள் நிரூபணமாகும்” என்று எச்சரிக்கிறார், இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் அ.கோபாலகிருஷ்ணன்.

அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு மற்றும் பூவுலகின் நண்பர்கள் ஆகியோர் இணைந்து, அணுசக்தி குறித்த கருத்தரங்கம் ஒன்றை கடந்த ஜனவரி 30-ம் தேதி சென்னையில் நடத்தினர். அ.கோபாலகிருஷ்ணன், இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் எல்.ராமதாஸ், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம், அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் சுப.உதயகுமார், கிரீன் பீஸ் அமைப்பின் ப்ரியா பிள்ளை உட்பட பலர் உரையாற்றினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்