“கரண்டி பிடிக்கும் பெண்ணால் கத்தி பிடிக்க முடியுமா?”

மேல்மருவத்தூரில் தமிழ் மண்ணே வணக்கம்

மாணவர்களின் சமூக அக்கறை யையும், தமிழ்நாட்டின் பாரம்பர்யத்தையும் எடுத்துரைக்கும் விதமாக கல்லூரி மாணவர் களிடையே ஜூனியர் விகடன் இதழ் நடத்தி வரும், ‘தமிழ் மண்ணே வணக்கம்’ நிகழ்ச்சி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

மருத்துவர் கு.சிவராமன் முதலில் பேசினார். “அமெரிக்கா சென்ற  பிரதமர் மோடி உலக அளவில் கோலோச்சிக் கொண்டிருக்கும் 540 நிறுவனங்களின் சி.இ.ஓ-க்களிடம் உரையாற்றினார். இந்திய வம்சாவளித் தலைவர்களுடன் விருந்து சாப்பிட்டார். அந்த விருந்தில் பூச்சிக்கொல்லி, ரசாயனம் இல்லாத இயற்கை முறையில் விளைந்த உணவு அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தியா வளர்ந்துகொண்டிருக்கும் அதேவேளையில், இந்திய மரபை உற்றுநோக்க ஆரம்பித்துள்ளது. எனவேதான், இதுபோன்ற நிகழ்வு நடக்கிறது. 1947-ல் நம்முடைய சராசரி ஆயுட்காலம் 37 வயதுதான். அதுவும்கூட, வசதி படைத்தவர்களுக்கே சாத்தியமாக இருந்தது. ஆனால், கடந்த 70 ஆண்டுகளில் சராசரி ஆயுட்காலம் 65 வயது என உயர்ந்துவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்