“ஓமந்தூரார் போன்ற முதல்வர் வேண்டும்!”

ந்திய சுதந்திரத்துக்கு முன்னும், சுதந்திரம் அடைந்தபோதும் அதற்குப் பின்னும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். அவரின் 121-வது பிறந்தநாளை திண்டிவனம் அருகில் இருக்கும் அவரது சொந்த ஊரான ஓமந்தூரில் அரசியல் கட்சிகளே வியக்கும் அளவுக்கு பிரமாண்டமான அலங்கார முகப்பு, மேடை எனக் கட்சி மாநாட்டைப்போல  நடத்தியிருக்கிறது தமிழ்நாடு ரெட்டி நலச் சங்கம். மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, அ.தி.மு.க சார்பில் தமிழக அமைச்சர்கள் வைத்திலிங்கம், மோகன், பா.ம.க தலைவர் ராமதாஸ், காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் என அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒரே மேடையில் அமர வைத்ததுதான் இதில் ஹைலைட். அத்தனை பேர் வார்த்தைகளிலும் தேர்தல் நெடி.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “ஓ.பி.ஆரைப்போல மீண்டும் ஒரு முதல்வர் தமிழகத்துக்கு வேண்டும் என்று சொல்வதற்காகவே இந்த மாநாடு கூட்டப்​பட்டுள்ளதுபோலத் தோன்றுகிறது. அதைச் சொல்வதற்குத்தான் நானும் இங்கு வந்துள்ளேன்” என்று சொல்ல, “வரும் தேர்தலில் கலைஞர் தலைமையிலே ஆட்சி அமைய நீங்கள் துணை இருந்தால், உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் உடனே நிறைவேற்றப்படும்” என்றார் பொன்முடி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்