“ஓய்வுபெறும்போது வெறும் கையோடு போகிறோம்!”

புதிய ஓய்வூதியத் திட்டத்தால் நிம்மதியிழந்த அரசு ஊழியர்கள்

“அரசு ஊழியர்களை நவீன பிச்சைக் காரர்களாக மாற்றிய, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்பவர் களுக்கே வரும் தேர்தலில் எங்கள் வாக்கு” என்று அதிரடி முடிவில் இறங்கியுள்ளனர் அரசு ஊழியர்கள். ‘பங்களிப்புடன் கூடிய புதிய பென்சன் திட்டம்’ என்ற திட்டத்தை தமிழக அரசு 2003-ம் ஆண்டு கொண்டு வந்தது. 2003-ம் ஆண்டுக்குப் பிறகு அரசு ஊழியர்களாகச் சேரும் அனைவருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டப்படிதான் பென்சன் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.

‘‘புதிய ஓய்வூதியத் திட்டத்தின் படி அரசு ஊழியர்​களின் அடிப் படைச் சம்பளம், தர ஊதியம் மற்றும் அதற்கு இணையான அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் மாதம்தோறும் 10 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும். அந்தத் தொகைக்கு இணையாக அரசு தனது பங்கைச் செலுத்தும். இவ்வாறு சேரும் தொகையில் 60 சதவிகிதம், ஊழியர் ஓய்வுபெறும்போது கொடுக்கப் படும். மீதமுள்ள 40 சதவிகிதத் தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு மாதந்தோறும் ஓய்வூதியமாக அளிக்கப்படும்” என்று அறிவித் தனர். தமிழகத்தில் ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் என சுமார் நான்கு லட்சம்பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருகின்றனர்.

இந்தியாவில் மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா மாநிலங்களைத் தவிர, அனைத்து மாநிலங்களிலும் இந்தத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி, ஊழியர்களின் பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அவர்களின் ஓய்வுக்காலத்தில் திருப்பித் தர டெல்லியில் ‘ஓய்வூதியத் தொகை வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை ஆணையம்’ செயல்பட்டு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்