கிரானைட் குவாரியை அனுமதித்தால்... தேர்தலைப் புறக்கணிப்போம்!

கொந்தளிக்கும் நெல்லை...

துரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளால் நடைபெற்ற சீரழிவுகள் போதாது என்று இப்போது திருநெல்வேலியிலும் சீரழிவுகளை ஏற்படுத்துவதற்கான வேலைகள் நடக்கின்றன. இதனால் கொந்தளித்த அந்தப் பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
 
நெல்லை மாவட்டம் நாங்குனேரி அருகே கடம்போடுவாழ்வு கிராமம் உள்ளது. அந்தப் பகுதியில் விவசாயம்தான் பிரதான தொழில். அங்கு, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் கிரானைட் குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது பொது மக்களிடம் கொந்தளிப்பை உருவாக்கி இருக்கிறது.

மதுரை மேலூரைச் சேர்ந்த கிரானைட் நிறுவனம் ஒன்றுக்கு, கடம்போடுவாழ்வு கிராமத்தில் குவாரி அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அந்த அனுமதியை ரத்துசெய்யக் கோரி, விவசாயிகள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். கடந்த 4-ம் தேதி அன்று நாங்குனேரி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க உட்பட பல கட்சிகளைச் சேர்தவர்களும், 18 கிராமங் களைச் சேர்ந்த மக்களும் கலந்துகொண்டனர். அனுமதியை ரத்து செய்யாவிட்டால் வரும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக எச்சரித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்