“பேரறிவாளனை விடுதலை செய்தால்... தமிழக அரசை யாரும் தடுக்க முடியாது!”

பிப்ரவரி இறுதிக்குள், தேர்தல் தேதியை அறிவித்துவிட்டு, அரசாங்கத்தின் அனைத்து அதிகாரங்களையும் தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிடும் என்று செய்திகள் வருகின்றன. அதற்குள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முக்கியமான முடிவை தமிழக அரசு எடுக்கும் என்று தகவல்கள் வருகின்றன.

திடீர் விடுதலை!


 2014, பிப்ரவரி மாதம் 19-ம் தேதி காலையில், அமைச்சரவையைத் திடீரெனக் கூட்டிய ஜெயலலிதா, “23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யலாம் என்று எனது தலைமையிலான அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இந்த வழக்கு மத்தியப் புலனாய்வு அமைப்பால் புலனாய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. எனவே, குற்றவியல்  நடைமுறைச் சட்டம் 435-ன்படி, தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். மத்திய அரசின் கருத்தினைப் பெறும் வகையில், ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு, மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை இந்த மாமன்றத்துக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முழங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்