கழுகார் பதில்கள்!

எஸ்.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.

 தலைநகரில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்றால், அ.தி.மு.க-வுக்கு அது பின்னடைவுதானே?


 அதாவது எம்.எல்.ஏ ஒருவர், தான் கொடுத்த வாக்குறுதி முழுமையையும் நிறைவேற்றுவது சிரமம்தான். ஆனால், பழ.கருப்பையா வைத்த குற்றச்சாட்டுகள், வாக்குறுதியை நிறைவேற்ற இயலாத தன்மை மட்டுமல்ல... வாக்குறுதியை நிறைவேற்றவிடாமல் அமைச்சர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், ஆளும் கட்சி கவுன்சிலர்கள் தடுத்தார்கள் என்பது. அதுதான் மிக முக்கியமான குற்றச்சாட்டு.

பழ.கருப்பையாவை அ.தி.மு.க-வில் வைத்துக் கொள்வதும் நீக்குவதும் ஜெயலலிதாவின் சொந்த விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால், அவர் யார் மீதெல்லாம் குற்றம்சாட்டினாரோ, அவர்களை அழைத்து அ.தி.மு.க தலைமை விசாரணை நடத்தியதா? நடத்தியதாகத் தெரியவில்லை. இதுதான் இந்த ஆட்சியின் நிலை.

சுந்தரிப்ரியன், வேதாரண்யம்.


 ‘கூட்டணி பற்றிய முடிவை தொண்டர்களிடம் கேட்டுத்தான் முடிவு செய்வேன்’ என்று விஜயகாந்த் கூறுவது உண்மையா?


 லட்சக்கணக்கான தொண்டர்களிடம் கேட்டுத்தான் முடிவுகள் எடுப்பாரா அவர்? கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இதைத்தான் விஜயகாந்த் சொன்னார். தொண்டர்களிடம் கருத்துக் கேட்க சேலத்தில் மாநாடு கூட்டினார். பல்லாயிரக்கணக்கானவர் கூடிய கூட்டம் அது. தனது உரையின் இறுதியில், ‘கூட்டணி வைக்கலாமா?’ என்று கேட்டார். தொண்டர்கள் கத்தினார்கள். ‘கூட்டணி வைக்க வேண்டாமா?’ என்று கேட்டார். அதற்கும் தொண்டர்கள் கத்தினார்கள். பேச்சை முடித்துவிட்டார் விஜயகாந்த். சில வாரங்களிலேயே போயஸ் கார்டனுக்குப் போனார். இதை, தொண்டர்கள் கருத்து என்று எப்படிச் சொல்ல முடியும்? இதெல்லாம் அரசியல்வாதிகள் சொல்லிக்கொள்ளும் வெறும் பேச்சு.

‘திருவாரூரில் போட்டியிடுவீர்களா?’ என்று கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டார்கள். ‘திருவாரூர் மக்கள் விரும்பினால் போட்டியிடுவேன்’ என்றார் கருணாநிதி. திருவாரூர் மக்கள் வேன் பிடித்து வந்து இவரிடம் கேட்பார்களா என்ன? இவை எல்லாம் அரசியலில் அர்த்தம் இல்லாமல் சொல்லப்படும் பதில்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்