பெரியோர்களே... தாய்மார்களே! - 62

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

ஒரு திருமணம் நடந்ததால், திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது என்று பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அது முழு உண்மை அல்ல... ஒரு திருமணம் நடக்காமல் போனதால், உதயமானதே திராவிட முன்னேற்றக் கழகம்.

மணியம்மையை பெரியார் திருமணம் செய்துகொண்டார், அதனால் வெறுப் புற்ற அண்ணா, திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறினார் என்பது பலரும் திரும்பத் திரும்பச் சொல்லும் வரலாறு.அண்ணா வெளியேறிய நேரம் அது. ஆனால், காரணம் அது மட்டும் அல்ல.

தனது அண்ணன் கிருஷ்ணசாமியின் மகன் சம்பத்துக்கு தனது தங்கை மகளைத் திருமணம் செய்துவைக்க நினைத்தார் பெரியார். அதன்பிறகு அவர்களுக்கு தனது சொத்துக்களைக் கொடுக்கவும் நினைத்தார். பெரியாருக்கும் நாகம்மாளுக்கும் திருமணம் ஆகி இவர்களுக்கு பிறந்த பெண்குழந்தை நான்கு மாதங்களில் இறந்துவிட்டது.  எனவே, சம்பத்தே தனது வாரிசு என நினைத்து வளர்த்தார் பெரியார். ஆனால் சம்பத், திருப்பத்தூர் வழக்கறிஞர் சாமியின் மகள் சுலோச்சனா வையே திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்தார். ‘‘நான் சொல்லும்படி நடக்கவில்லை என்றால்  என்னை மறந்துவிடு” என்றார் பெரியார். திருமணத்தைப் பெரியார் நடத்தி வைத்தாலும், ‘‘சினிமா, நாடகம் என்று சம்பத்தைக் கெடுத்ததே அண்ணாதான்” என்று பெரியார் நினைத்தார். இது நடந்தது 1946-ம் ஆண்டு  செப்டம்பர் மாதம். முதல் மனவேறுபாடு துளிர்க்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்