மாடித்தோட்டம் நல்லது... வீரிய ஒட்டு விதை கெட்டது!

ஹா... அரசாங்கம் நல்லது செய்கிறதே என்று பார்த்தால், அதிலும் ஒரு சிக்கல்!

நகர்ப்புறத் தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ‘நீங்களே செய்து பாருங்கள்’ என்ற பெயரில் மாடித்தோட்டத்​துக்கான உபகரணங்கள் சென்னை, கோயம்புத்தூர் மாநகரங்களில் சலுகை விலையில் விற்பனை செய்யப் படுகின்றன. கடந்த வாரம் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையின் சார்பில் சிறப்பு மையங்கள் மூலம் சென்னையில் சுமார் 50,000 மாடித்தோட்ட உபகரணங்கள் விற்பனை செய்யப்பட்டன. அவை ‘ஹைபிரீட்’ மற்றும் மரபணு மாற்று விதைகள் என்றும், இந்தோ - அமெரிக்க கம்பெனி தயாரிப்பு என்றும் குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் முனைவர் செல்வராஜ், “இரண்டு வெவ்வேறு ரகங்களைக் கலப்புசெய்து உருவாக்குவதுதான் வீரிய ஒட்டு ரகங்கள் (ஹைபிரீட்) என்று அழைக்கப்படுகிறது. இதைச் சாப்பிடுவதால் உடலுக்கு எந்தப் பக்க விளைவும் ஏற்படாது. இதுவரை இதைச் சாப்பிட்டவர்களுக்கு எந்தவிதமான பாதிப்போ, பிரச்னையோ ஏற்பட்டதில்லை. நெல், மக்காச்சோளம், துவரை, சூரியகாந்தி, காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட விதைகள், வீரிய ஒட்டு ரகங்களாக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப் படுகின்றன. இந்த விதைகளை சிலர் மரபணு மாற்று விதைகள் என்று சொல்கின்றனர். அரசின் அனுமதி இல்லாமல் மரபணு மாற்று விதைகளை பல்கலைக்கழகம் மூலம் உருவாக்க முடியாது. விதைகளை பூஞ்சணத் தாக்குதல் பாதிப்பிலிருந்து காக்கவே பூஞ்சணக் கொல்லி கலந்த நிறமேற்றப்பட்ட விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தண்ணீரில் ஊறவைத்து பயன்படுத்தும் போது எந்தவித பாதிப்பும் இருக்காது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்