தற்கொலைக்குச் சென்ற விவசாயி... சாதனையாளராக மாறினார்...

திருச்சியில் பசுமை விகடன் வேளாண் கண்காட்சி

‘‘விவசாயம் கைகொடுக்க​வில்லை... கடனுக்கு வட்டி​கட்டி மாளவில்லை’’ என்றபடி தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை இந்தியாவில் பெருகிக்கொண்டே இருக்கிறது. அரசாங்கத்தின் திட்டங்களையும், விவசாய விஞ்ஞானிகள் அள்ளிவிடும் தொழில்நுட்பங்களையும் நம்பி நம்பி ஏமாந்து, கடைசியில இப்படி தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகவே இருக்கிறது.

இதோ... கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், பன்னூரைச் சேர்ந்த கிருஷ்ணப்பா தாசே கவுடாவும், இப்படி தற்கொலையை நோக்கி ஓடியவர்தான். ஆனால், ஒரு கட்டத்தில் உண்மையை உணர்ந்தவர்... இன்றைக்கு, சாகுபடி செலவே இல்லாமல் 3 ஏக்கர் நிலத்தில் இருந்து ஆண்டுக்கு 6 லட்ச ரூபாய் வருமானம் எடுத்து வருகிறார். சாதனையாளராக உயர்ந்துள்ள இவரது பண்ணை... இந்தியாவின் சிறந்த இயற்கை விவசாய மாதிரிப் பண்ணைகளில் ஒன்றாக விளங்குகிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பலநாடுகளில் இருந்தும் இவரது நிலத்தை வந்து பார்வையிட்டுச் செல்கிறார்கள் ஆராய்ச்சி​யாளர்கள். விவசாயக் கல்லூரிப் பேராசிரியர்களும், மாணவர்களும் இவரிடம் பாடம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படி நடந்தது இந்த அதிரடி மாற்றம்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்