“இந்தக் கைதானே கொடியை எரித்தது?”

ன்ன காரணம் சொன்னாலும் தேசியக் கொடியை எரித்தது கண்டிக்கத்தக்க, தண்டிக்கத்தக்க குற்றம். ஆனால் அந்தக் குற்றத்துக்கு சட்டப்பூர்வம் அல்லாத வழிகளில் தண்டனைகளைத் தந்து மனித உரிமை மீறல்களைக் காவல் துறை செய்துள்ளதாக புகார்கள் கிளம்பி உள்ளன.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த திலீபன் மகேந்திரன் என்ற இளைஞர், இந்திய தேசியக் கொடியை எரித்து அதனுடைய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் கடந்த வாரம் பரப்பினார். இது கடுமையான விவாதங்களைக் கிளப்பியது. ‘இந்த மாதிரி செய்தவரை விடக் கூடாது. போலீஸ் கைதுசெய்ய வேண்டும்’ என்று கோரிக்கைகள் எழுந்தன. உடனடியாக திலீபன் மகேந்திரனை கடந்த 1-ம் தேதி சென்னை ராயப்பேட்டை போலீஸார் கைதுசெய்தனர்.  சிறையில் அடைக்கப்பட்ட திலீபனின் புகைப்படம் மறுபடியும் வாட்ஸ் அப்பில் பரவியது. வலது கை உடைந்த நிலையில் மாவுக்கட்டு போட்டபடி திலீபன் நிற்கும் படம் அது. ‘‘போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டவரின் படம் எப்படி ரிலீஸ் ஆனது?” என்ற தகவல் பரவியது. ‘‘போலீஸார் திலீபனின் கையை உடைத்து, ‘பார்த்தீர்களா... நாங்கள் அவனது கையை உடைத்துவிட்டோம்’ என்று காட்ட நினைத்துள்ளார்கள். இதெல்லாம் சட்டப் பூர்வமானதா?” என்று அடுத்த பிரச்னை கிளம்பி உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்