பறந்த அ.தி.மு.க-வினர்! - பண்டலோடு தி.மு.க-வினர்...

“108 ஆம்புலன்ஸில் பணம் கொண்டு போவார்கள்!”தேர்தல் ஆலோசனையில் அதிரடி

ட்டமன்றத் தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இன்னொருபுறம் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகளுடனான சந்திப்பை சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் நடத்தி அரசியல் கட்சிகளை அசரவைத்தது தேர்தல் ஆணையம்.

தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, தேர்தல் ஆணையர்கள் ஏ.கே.ஜோஷி, ஓம்பிரகாஷ் ராவத் உள்ளிட்ட அதிகாரிகளும், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட அதிகாரிகளும், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கடந்த 10-ம் தேதி மாலை நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு கட்சியினருக்கும் 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. கட்சியின் பிரதிநிதிகள் தனி அறையில் அமர வைக்கப்பட்டு இருந்தனர். தேர்தல் அதிகாரிகள் கான்ஃபரன்ஸ் ஹாலில் இருந்தனர். முதலில் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளும், அதன்பின் மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளும் அகர வரிசைப்படி அழைக்கப்பட்டனர். ஒரு கட்சியின் பிரதிநிதிகள் கருத்துகளைத் தெரிவித்துவிட்டு, அங்கிருந்து கிளம்பியபின்தான், அடுத்த கட்சியின் பிரதிநிதிகள் உள்ளே அழைக்கப்பட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்