நாசிக் போலீஸ் கமிஷனர் தரும் ஆலோசனைகள்!

மகாமக ஏற்பாடுகள்...

கும்பகோணத்தில் ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் வருகிற 13-ம் தேதி கொடியேற்றத்துடன் மகாமக திருவிழா தொடங்குகிறது. கோயில் குளத்தில் மாசி மகத்தன்று நீராடினால், யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவிரி உள்ளிட்ட 12 புண்ணிய நதிகளில் நீராடிய பலன்கிட்டும் என்பது நம்பிக்கை. இதில் சுமார் 50 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.

எப்படி இத்தனை லட்சம் பேரையும் கும்பகோணம் எதிர்கொள்ளப் போகிறது? கடந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கும்பமேளாவை எந்த அசம்பாவிதமும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்திக்காட்டினார் அந்த நகரின் போலீஸ் கமிஷனராக இருந்த எஸ்.ஜெகநாதன் ஐ.பி.எஸ். இதைக் கேள்விப்பட்ட, கும்பகோணம் மகாமக பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான பொறுப்பு வகிக்கும் திருச்சி மண்டல ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன், ஜெகநாதனைத் தொடர்புகொண்டு ஆலோசனை செய்துள்ளார்.

இதுகுறித்து ஜெகநாதனிடம் பேசினோம். “நாசிக்கில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி முதல் செப்டம்பர் 25-ந் தேதி வரை 74 நாட்கள் கும்பமேளா திருவிழாக்கள் நடந்தன. முதலில், ராம்குண்ட் என்ற இடத்தில் சாதுக்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஆற்றில் எறியும் வெண்கல நாணயங்களை எடுக்க பக்தர்கள் கூட்டம் முட்டி மோதுவர். சாதுக்களால் வழங்கப்படும் அந்த நாணயங்களில் அரிய சக்திகள் இருப்பதாக ஓர் ஐதீகம்.

நாசிக் நகருக்கு நேபாளம், குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சாதுக்கள், மடாதிபதிகள் படையெடுத்து வந்தனர். மொத்தமாக ஒரு கோடியே 60 லட்சம் பேர் கலந்து கொண்டார்கள். பக்தர்களும், சாதுக்களும் கோதாவரி ஆற்றில் புனித நீராடினார்கள். சுமார் 18 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்