கழுகார் பதில்கள்!

மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை-18.

 ‘ஸ்டாலின் முதல்வர்’ என்ற சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து ஏற்புடையதா?


 சுவாமி ஒரே நேரத்தில் ஜெயலலிதா வையும், கருணாநிதியையும் காலி செய்துவிடக் கொளுத்திப்போட்ட தீக்குச்சி இது. கருணாநிதியா, ஸ்டாலினா என்பது அவர்கள் இருவரும்தான் முடிவுசெய்ய வேண்டுமே தவிர, அதில் சுவாமி கருத்தைக் கேட்கும் நிலைமையில் தி.மு.க இருப்பதாகத் தெரியவில்லை.

தி.மு.க-வை ஆதரிக்க சுவாமி தயார் ஆகிவிட்டார். கருணாநிதியை ஆதரிக்க கூச்சமாக இருக்கிறது அவருக்கு. அதனால், ஸ்டாலின் என்று சொல்லிப் பார்க்கிறார். அவ்வளவுதான்!

எட்டுமணி பாரதிராஜா, பொன்னமராவதி.


 சொன்னது மாதிரியே ஊழல் பட்டியலை இளங்கோவன் வெளியிட்டுவிட்டார். அடுத்து..?

 செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குமார சாமி தற்கொலை, மின் கொள்முதல், கோகோ-கோலா நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்தது, உயர்கல்வித் துறை, பள்ளிக்கல்வித் துறை, ஆவின் பால் கலப்படம், லேப்டாப், நெடுஞ்சாலைத் துறை, பாதாளச் சாக்கடை, உடன்குடி மின் திட்டம், டாஸ்மாக், நெல் மூட்டைகளில் கலப்படம், தொழில் துறை, மின்வாரியம், செய்தித் துறை, போக்குவரத்துத் துறை, நூலகத் துறை, மருத்துவத் துறை, பத்திரப்பதிவுத் துறை, ரியல் எஸ்டேட், வணிகவரித் துறை, கிரானைட், மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல், இ.எஸ்.ஐ. மருத்துவமனை, பொது விநியோகத் துறை - என 25 தலைப்புகளின் கீழ் தனது ஊழல் பட்டியலை புத்தகமாகவே அச்சடித்து நிருபர்கள் முன் வெளியிட்டார் இளங்கோவன்.

இதுவரை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்களோ, அதிகாரிகளோ விளக்க அறிக்கை வெளியிடவில்லை. எது எதற்கோ அவதூறு வழக்குகளைப் போடும் அரசு வழக்கறிஞர்கள் உஷாராக இதற்கு வழக்குப் போடவில்லை. இந்தப் புத்தகத்தை ஏராளமாக அச்சிட்டு காங்கிரஸ் கமிட்டி விநியோகிக்க ஆரம்பித்து உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்