கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிப்பாரா?

எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் தே.மு.தி.க. மாநாடு

வ்வொரு தேர்தலுக்கும் முன்பாக விஜயகாந்த் நடத்தும் மாநாடு தொண்டர்களிடமும், அரசியல் கட்சிகளிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் 20-ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறப்போகும் தே.மு.தி.க-வின் ‘திருப்புமுனை மாநாடு’ எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.

காஞ்சிபுரத்திலிருந்து ஏழு கி.மீ தொலைவில், சென்னை - பெங்களூர் ஹைவே-யில் உள்ள வேடல் பகுதியில் மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. வேடலில் மாநாடு நடத்த அனுமதி கேட்டு தே.மு.தி.க சார்பில் விண்ணப்பித்தபோதே போலீஸார் பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டிருக்கின்றனர். ‘மாநாடு நடக்கும் இடம், நீர்வழிகளைச் சீரழிக்கும் என்பதால் அனுமதி கொடுக்க முடியாது’ என்று கூறியிருக்கின்றனர்.

பின்னர் நீர்வழிப் பாதைகளைத் தவிர்த்து பிற பகுதிகளில் மாநாடு நடத்திக்கொள்ள அனுமதி கேட்டனர். இதன் பின்னர்தான் அனுமதி கிடைத்திருக்கிறது. ஆளும் கட்சியின் தலையீடு காரணமாகவே போலீஸார் இழுத்தடித்ததாக தே.மு.தி.க-வினர் கூறுகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்