அம்மா மெஸ்ல துன்னுக்கோ... டாஸ்மாக்ல தூங்கிக்கோ!

டாஸ்மாக் எதிர்ப்பு மாநாட்டில் ஆக்ரோஷம்

“என் கணவரோட குடிப்பழக்கத்தால் நானும் என் குழந்தையும் அநாதை ஆயிட்டோம். 5 மாத கைக்குழந்தையையும் என்னையும் விட்டுட்டு அவர் போய்ச் சேர்ந்திட்டாரு. குடிச்சே செத்துப்போயிட்டாரு. என்னை மாதிரியே ஆயிரக்கணக்கான பெண்கள், தாலி அறுத்துட்டுக் கெடக்குறோம். இப்போ, நானும் என் குழந்தையும் அனுபவிக்கிற துயரங்களை வெளியே சொல்ல முடியாது. ஊர் ஊருக்கு சாராயக் கடைகளை தொறந்து வெச்சிருக்குற அரசாங்கம்தான் எல்லாத்துக்கும் காரணம். இனிமே, எந்தக் கட்சியா இருந்தாலும், டாஸ்மாக் கடைகளை மூடிட்டு வந்தாதான் ஓட்டு போடுவோம். இல்லைன்னா, இதுக்குக் காரணமான கட்சிக்காரங்க யாரும் ஓட்டு கேட்டு ஊருக்குள் நுழைய முடியாது” என்று திருச்சியில் நடைபெற்ற மதுவுக்கு எதிரான மாநாட்டில் முழங்கினார் மந்திரிகுமாரி என்ற பெண்.

‘டாஸ்மாக்கை மூடவேண்டும்’ என்று வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில், திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் கடந்த 14-ம் தேதி மாநாடு நடைபெற்றது. அதில், தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக் கானோர் குவிந்தனர். ‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்ற கோஷத்தால் அந்தப் பகுதியே அதிர்ந்தது. மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் மருதையன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு, காளியப்பன், பாடகர் கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்