கலைஞருக்கே தி.மு.க-வில் மரியாதை இல்லை...

மு.க.அழகிரி அதிரடி

“காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியை மக்கள் ஏற்கமாட்டார்கள். தி.மு.க தோற்றுவிடும்’’ என்று மு.க.அழகிரி அளித்த அதிரடி பேட்டி, தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் சூடான கருணாநிதி, கண்டன அறிக்கை ஒன்றை உடனடியாக வெளியிட்டார். அதில், “தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டுள்ள அழகிரி, கட்சியின் வளர்ச்சியைக் கெடுக்கும் வகையிலும் எழுச்சியைக் குலைக்கும் வகையிலும் செயல்படுகிறார். அவருக்கும் தி.மு.க-வுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர் செய்யும் துரோகத்துக்கு என் பெயரை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. அவருடைய கருத்துக்களை தொண்டர்கள் பொருட்படுத்த வேண்டாம், அலட்சியப்படுத்துங்கள்’’ என்று காட்டமாகச் சொல்லியிருந்தார்.

கருணாநிதியின் அறிக்கை குறித்து அழகிரி என்ன நினைக்கிறார் என்பதை அறிவதற்காக அழகிரியைத் தொடர்புகொண்டோம். “பேட்டி எதுவும் கொடுக்குற மூடில் இல்லை’’ என்று முதலில் சொன்னார். ஆனாலும், அந்த அறிக்கையில் கருணாநிதி சொல்லியிருக்கும் விவரங்களை அவரிடம் சொன்னவுடன், “இந்த அறிக்கையை கலைஞர்தான் வெளியிட்டார் என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியுமா? அந்த அறிக்கையை அவர் நேரில் வந்து உங்களிடம் கொடுத்தாரா? அதை யாரோ வெளியிட்டு இருக்கிறார்கள். ராஜமாணிக்கம்கூட அதை எழுதியிருக்கலாம். அது கலைஞரின் அறிக்கை அல்ல’’ என்று சொன்னார். அதையடுத்து, வேறு சில கேள்விகளை அவரிடம் எழுப்பினோம்.

“காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது என்று நீங்கள் சொன்னது சரியா?’’

“ஆமாம். காங்கிரஸைவிட்டு விலகியபோது கலைஞர் என்ன சொன்னார்? ‘கூடாநட்பு கேடாய் முடியும்’ என்று சொன்னாரா, இல்லையா? இப்போது மட்டும் எப்படிச் சேர்ந்தார்? இந்தக் கேள்வியை மக்கள் கேட்க மாட்டார்களா? ஈழத்தமிழர் பிரச்னைக்காக காங்கிரஸில் இருந்து விலகுவதாகச் சொன்னார். இப்போது மட்டும் ஈழப் பிரச்னையை காங்கிரஸ் நல்லபடியாக முடித்துவிட்டதா? உண்மையான விஷயம் அதுவல்ல.

தி.மு.க-வில் நான் ஒருவன் கேபினட் மினிஸ்டராக தொடர்ந்து இருந்தேன். அது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் கூட்டணியைவிட்டு விலகினார்கள். அதுவும் நள்ளிரவில் பிரதமரைச் சந்தித்து விலகல் முடிவை தெரிவித்தார்கள். இதுதான் உண்மையான காரணம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்