கல்லூரி சுவரை இடி... ட்ரோன் கேமராவில் படம்பிடி!

மந்திரிகள் வீட்டு தடபுடல் திருமணங்கள்

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமண ஆடம்பரத்தை இந்தியாவே திரும்பிப் பார்த்தது... கின்னஸ் சாதனை படைத்தது. கிட்டத்தட்ட அதே ரேஞ்சுக்கு தஞ்சாவூரிலும் திருவாரூரிலும் இரண்டு திருமண வரவேற்புகள் அரங்கேறின. சமீபத்தில் ஜெயலலிதா நடத்திவைத்த திருமணங்களில் மந்திரிகள் வைத்திலிங்கம், காமராஜ் வீட்டுத் திருமணங்களும் அடங்கும். இந்த இரண்டு திருமண வரவேற்புகள்தான் ஏக தடபுடல். கல்யாண கலாட்டா காட்சிகள் இங்கே...

* கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள மாநகராட்சித் திடலில்தான் ஜெயலலிதாவின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதே இடத்தில்தான் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை மாநாடுபோல் நடத்தியிருக்கிறார் அமைச்சர் வைத்திலிங்கம்.

* பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள். அதற்கு வைக்கப்பட்ட பேனர்களை மிஞ்சிவிட்டன இவர்களது விளம்பரங்கள். வைத்திலிங்கம் மகள் திருமண விழாவுக்கு ப்ளெக்ஸ் வைத்து தெறிக்கவிட்டிருந்தார்கள்அம்மாவின் விசுவாசிகள். டிராஃபிக் ஜாம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக அருகில் இருந்த மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியின் பின்பக்கச் சுவரை மூன்று இடங்களில் இடித்து வாகனங்கள் செல்ல கார் பார்க்கிங் வசதியையும் ஏற்படுத்தி இருந்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்