ஒரே நாளில் இரண்டு தகுதி தேர்வுகள்!

அரசின் குளறுபடிகளால் அலைக்கழிக்கப்படும் ஆசிரியர்கள்

பேராசிரியர் பணிக்கான தேர்வுகள் நடத்துவதற்கான அறிவிப்புகள் பல்வேறு குழப்பங்களை உருவாக்கி உள்ளன. தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், தேர்வு எழுதவும் அவகாசம் இல்லாத இந்த அதிரடி அறிவிப்புகளால் எந்தப் பயனும் ஏற்படாது என்கின்றன கல்வித் துறை வட்டாரங்கள்.

இதுகுறித்து, பல்கலைக்கழக ஆசிரியர் தகுதித் தேர்வு அசோசியேஷன் (நெட் / செட்) தலைவர் தங்க முனியாண்டி, பொதுச்செயலாளர் நாகராஜன் ஆகியோரிடம் பேசினோம்.

‘‘பல்கலைக்கழகத்திலோ, கல்லூரியிலோ உதவிப் பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால், தேசிய அளவில் நடைபெறும் ‘நெட்’ தகுதித் தேர்வில் அல்லது மாநில அளவில் நடக்கும் ‘செட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தத் தேர்வை எழுத பட்டமேற் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்ணுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ‘நெட்’ தேர்வில் தேர்ச்சிப்  பெற்றால் இந்தியாவில் எங்கு வேண்டு மானாலும் பணியில் சேரலாம். அதேநேரத்தில், மாநில அளவில் நடத்தப்படும் ‘செட்’ தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மட்டுமே பணியாற்ற முடியும்.

‘செட்’ தேர்வை நடத்த தமிழகத்தில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துக்குக் கடந்த ஆண்டு மே மாதமே பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி கொடுத்தது. இந்த அனுமதி கிடைத்து 10 மாதங்கள் ஆனபிறகு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவசர அவசரமாக தேர்வுக்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டனர். ‘செட்’ தேர்வு அறிவிப்பில் உறுப்பினர் செயலர் ஆக செயல்படும் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) கைப்பேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைமுறையில், இது தவறான ஒன்று. மேலும், அன்னை தெரசா பல்கலைக்கழகம் தயாரிக்க வேண்டிய தேர்வு வினாத்தாள்களை அண்ணா பல்கலைக்கழகம் தயாரிப்பதாகத் தெரியவருகிறது. இதுவும் தவறு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்