மிஸ்டர் கழுகு: காங்கிரஸுக்கு முதல் மரியாதை! - கடுப்பான விஜயகாந்த்

‘‘நீர் சொன்ன மாதிரியே ராகுல் காந்தியின் கட்டளை நிறைவேற்றப்பட்டுவிட்டதே!” என்று கழுகாரைப் பார்த்ததும் சொன்னோம். சிரிப்பைச் சிந்தியபடி பின்னணித் தகவல்களைக் கொட்ட ஆரம்பித்தார் கழுகார்.

“தே.மு.தி.க-வை தங்களது கூட்டணிக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் பலமுறை அழைத்துவிட்டார் கருணாநிதி. ஆனால், விஜயகாந்த் தரப்பில் இருந்து சரியான ரெஸ்பான்ஸ் இல்லை. அதே நேரத்தில் சுப்பிரமணியன் சுவாமி புது குண்டு வீசினார். ‘ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் தி.மு.க., தே.மு.தி.க., பி.ஜே.பி கூட்டணி உருவாகும்’ என்று கொளுத்திப்போட, காங்கிரஸ் மேலிடம் உஷாராகிவிட்டது. ஏற்கெனவே, தி.மு.க கூட்டணிக்குப் பச்சைக் கொடி காட்டி இருந்தார் ராகுல். ‘கூட்டணியைப் பொறுத்தவரை தமிழக காங்கிரஸ் கட்சியின் முடிவை அகில இந்தியத் தலைமை ஏற்கும்’ என்று ராகுல் சொன்னதும் இளங்கோவன் உள்ளிட்ட மாநில வி.ஐ.பி-க்கள் அவரைச் சந்தித்துப் பேசியது பற்றியும் சொல்லி இருந்தேன். இந்த மாதக் கடைசியில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் காங்கிரஸ் நினைத்திருந்தது. ஆனால், சுவாமி போட்ட வெடியில் கலங்கிப்போனது காங்கிரஸ் தலைமை. தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்த குலாம்நபி ஆசாத்-தான் சரியான நபர் என்று முடிவு செய்தது. ‘நான் 13-ம் தேதி புதுச்சேரி செல்கிறேன். அப்போது கருணாநிதியிடம் பேசுகிறேன்’ என்று ஆசாத் சொல்லி இருக்கிறார். அதற்குள் பி.ஜே.பி ஏதாவது முயற்சிகளை மேற்கொண்டுவிடக் கூடாது என்பதால், அங்கிருந்தபடியே போனில் கருணாநிதியிடம் பேசினார் ஆசாத். இதற்கான மீடியேட்டர் கனிமொழி!”

‘‘அப்படியா?”

‘‘ஸ்டாலினிடம் பேசினார் கனிமொழி.

பி.ஜே.பி-யா... காங்கிரஸா? என்பதில் கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி ஆகியோருக்கு இடையில் முதலில் குழப்பம் இருந்தது. சுவாமி சொல்லி இருந்தாலும், ‘பி.ஜே.பி கூட்டணி சரிப்பட்டு வராது’ என்று இவர்கள் மூவரும் நினைத்தார்கள். அதே நேரத்தில், விஜயகாந்த்தையும் பி.ஜே.பி. அழைத்து வந்தால் நமக்கு ரிஸ்க் இருக்காது என்று முதலில் நினைத்தார்கள். பி.ஜே.பி-க்கும் விஜயகாந்த் சரியாகப் பிடி கொடுக்கவில்லை என்று கருணாநிதிக்குத் தெரியவந்தது. அதனால்தான் உடனடியாக சிக்னல் காட்டினார்கள். சோனியா, ராகுல் ஆகிய இருவரும் கருணாநிதியிடம் பேசி உள்ளார்கள்.”

‘‘ஓஹோ!”

‘‘கருணாநிதியைச் சந்திப்பது உறுதியானதும், முதலில் குலாம் நபிக்கு மட்டும்தான் நேரம் கேட்கப்பட்டது. அதன் பின்னர் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக இருக்கும் முகுல்வாஸ்னிக்கையும் அழைத்துப் போக டெல்லி தலைமை அறிவுறுத்தி உள்ளது. தான் தங்கியிருந்த ஹோட்டலில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் குலாம் நபி ஆசாத் ஆலோசனை செய்துவிட்டுத்தான் அங்கிருந்து கிளம்பினார். கோபாலபுரம் வீட்டில் வாசலுக்கே வந்து ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்று கருணாநிதி அறைக்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சந்திப்பில் தொகுதிகள் எத்தனை... எந்தெந்தத் தொகுதிகள்? என்பது பற்றிப் பேசவில்லை. கூட்டணி உறுதி மட்டுமே செய்யப்பட்டது. ‘மூத்த தலைவரான நீங்கள்தான் இந்தக் கூட்டணிக்குத் தலைமை வகிக்க வேண்டும், யாரைக் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதையெல்லாம் நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்’ என்று ஆசாத் சொன்னது, கருணாநிதியை உற்சாகப்படுத்தியது. ‘தொகுதிப் பங்கீடு குறித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி மூலம் ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழுவினர் உங்கள் கட்சியுடன் பேசுவார்கள். அடுத்த சந்திப்பை உங்கள் விருப்பப்படி வைத்துக் கொள்ளலாம்’ என்று கருணாநிதிக்கு முக்கியத்துவம் கொடுத்தே குலாம் நபி பேசியுள்ளார்.

‘‘காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்