பெரியோர்களே... தாய்மார்களே! - 64

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

காமராஜர் ஆட்சியை அமைப்போம்! - என்ற முழக்கத்தை கந்தசஷ்டி கவசம்போல தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் அவ்வப்போது முணுமுணுப்பார்கள். சில நேரங்களில் அடுத்தவர் காதுக்குக் கேட்பது மாதிரியும், பல நேரங்களில் கேட்காதது மாதிரியும் அவர்கள் சொல்லிக்கொள்வார்கள். காமராஜர் ஆட்சி என்பது 52 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் இருந்தது. அரை நூற்றாண்டுகள் கடந்தும், அதாவது மூன்று தலைமுறை கடந்தபின்னும் ஒரு மனிதனின் ஆட்சி சிறப்புக்குரியதாகப் போற்றப்படுகிறது என்றால், அதற்கு என்ன காரணம்?

நாம் இன்று அவரை, ‘பெருந்தலைவர்’ என்கிறோம்... ‘கர்ம வீரர்’ என்கிறோம். அவர், தன்னை அப்படிச் சொல்லிக்கொள்ளவும் இல்லை... நினைத்துக்கொள்ளவும் இல்லை. ‘‘எல்லோரும் மந்திரி; நான் பெரிய மந்திரி. அவ்வளவுதான்’’ என்றார். தன் மனதுக்கு எது சரி என்று பட்டதோ, அதைச் செய்ய நினைத்தார்... செய்து முடித்தார். அதற்கு விதிமுறையா... சட்டத்திட்டமா... அதிகாரிகளா... யார் தடையாக இருந்தாலும் தகர்த்தார். முந்தைய 30 ஆண்டு காலம் மூலை முடுக்கெல்லாம் பேருந்தில், லாரியில், மாட்டுவண்டியில், சைக்கிளில் அலைந்து தமிழ்நாட்டின் நீள அகலங்களைத் தனது கண்ணால் பார்த்து இதயத்தால் நுகர்ந்து எண்ணக்கூட்டில் அடைத்து வைத்திருந்த அத்தனை ஏக்கங்களையும் எவன் எதிர்த்தாலும் செய்து முடிக்கும் தெம்பும், திராணியும் காமராஜருக்கு இருந்தது. அதனால்தான் காமராஜர் ஆட்சியில் என்ன நடந்தது என்றே தெரியாதவர்கள்கூட, ‘காமராஜர் ஆட்சி நல்லாட்சி’ என்று தீர்ப்பு எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு காரியத்தைச் செய்யச் சொல்கிறார் காமராஜர். ‘‘ஜி.ஓ. இடம் தராது’’ என்கிறார் அதிகாரி. ‘‘ஜி.ஓ. என்றால் என்ன?’’ என்று கேட்டார் முதல்வர். ‘‘ஜி.ஓ-ன்னா கவர்மென்ட் ஆர்டர்’’ என்றார் அதிகாரி. ‘‘கவர்மென்ட் ஆர்டர்ன்னா என்ன?’’ என்று கேட்டார் காமராஜர். பதில் சொல்ல முடியாமல் திணறினார் அதிகாரி. ‘‘நீங்கள் எழுதி வைப்பதில் நான் கையெழுத்துப் போட்டால் கவர்மென்ட் ஆர்டர் அப்படித்தானே!” என்று கேட்ட காமராஜர், ‘‘நான் சொன்னபடி மாற்றி எழுதுங்கள். நான் கையெழுத்துப் போடுகிறேன்” என்றார். அங்கே நிற்கிறார் காமராஜர்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்