விநாயகரைப் பூட்டு... டாஸ்மாக்கை ஓட்டு!

மகாமக லைவ் ரிப்போர்ட்

கும்பகோணத்தில் கடந்த 13-ம் தேதி ஆதிகும்பேஸ்வரன் கோயில் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது மகாமக விழா. கொடியேற்றத்தில் அமைச்சர்கள் வைத்திலிங்கம், ஆர்.காமராஜ், அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டார்கள்.  ஆன்மிகத்திலும் அரசியல் வாசனை அதிகமாக வீசியதுதான் வேதனை.

கொடியேற்ற நிகழ்ச்சிக்கு வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம், இந்து சமயநலத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆகியோர் வந்திருந்தனர். திருவாவடுதுறை ஆதீனம், மதுரை ஆதீனம், தர்மபுரம் ஆதீனம், காசிமடம் எஜமான சாமிகள், காமாட்சிபுரம் ஆதீனங்கள், கோவை பேரூர் ஆதீனம் ஆகியோர் கலந்து கொண்டனர். மதுரை ஆதீனத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பதிலுக்கு அவரும் ‘234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வேன். அம்மாதான் அடுத்த முதல்வர்’ என்று பேட்டி அளித்தார். மத்திய அமைச்சர் பொன்னார் வந்திருந்தார். மகாமகக் குளத்தில் இறங்கித் தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக்கொண்டார்.

அமைச்சர்களும், ஆதீனங்களும் சூழ, மகாமக குளக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. தீர்த்தவாரி முடிந்தவுடன் அமைச்சர்கள் குளத்தில் புனித நீராடுவதற்கு இறங்கினர். அப்போது, குளத்தில் இறங்கிய அமைச்சர்களுக்குப் பாதுகாப்புக்கு வந்தவர்கள், ஆதீனங்கள் சிலரை ஓரமாக நிற்கச் சொல்லிவிட்டனர். ‘அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் குளத்தில் இறங்கி நீராடியது சமய மரபுகளை மீறிய செயல்’ என்கிறார்கள் ஆன்மிகவாதிகள். ஆதீனங்கள், மடாதிபதிகள், சமயபெருமக்கள், ஆன்மிகப் பெரியோர்கள் ஆகியோர் புனிதநீராடி தொடங்கிவைத்த பிறகுதான் பொதுமக்களும், பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இதற்கு நேர்மாறாக வைபவங்கள் நடந்தேறின.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்