விஜயகாந்த் சொல்வதுதான் முக்கியம்... பிரேமலதாவுக்குப் பதில் சொல்ல முடியாது!

இளங்கோவன் காட்டம்

தி.மு.க-வுடன் தேர்தல் கூட்டணி ஏற்பட்ட பிறகு புத்துணர்வோடு காணப்படுகிறார், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். தினமும் தன்னைச் சந்திப்பதற்காக சத்தியமூர்த்தி பவனுக்கு வருகிற தொண்டர்களுடன் உற்சாகத்தோடு கலந்துரையாடுகிறார். “போன முறை தொகுதிக்குச் சம்பந்தமில்லாத ஒருவரை வேட்பாளராகப் போட்டீர்கள்” என்று ஆதங்கப்பட்ட ஒரு மாவட்ட நிர்வாகியிடம், “இந்த முறை எல்லாம் சரியாகவே நடக்கும். டோன்ட் வொர்ரி...” என்று புன்னகையோடு சொல்லிவிட்டு, “கேள்விகளை ஆரம்பியுங்கள்” என்று நம் பக்கம் திரும்பினார்.

“கூட்டணியில் இருந்து விலகியபோது, இரண்டு கட்சிகளும் மாறி மாறி கடுமையாக விமர்சனம் செய்துகொண்டீர்களே. இப்போது..?”

“தேர்தலுக்குத் தேர்தல் சூழ்நிலைகள் மாறும். அன்றைக்கு இருந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு நானும் கருத்துச் சொன்னேன். தி.மு.க-விலும் கருத்துச் சொன்னார்கள். இன்றைய சூழ்நிலை வேறு. மக்களுக்கு ஒரு நல்லாட்சி தேவைப்படுகிறது. எனவே, அதைப்பற்றித்தான் பேச வேண்டும். அதைவிடுத்து, நேற்று என்ன சொன்னோம்... கடந்த ஆண்டு என்ன சொன்னோம் என்பதைப் பற்றி எல்லாம் பேசி ஊடகங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். என்னைப் பொறுத்தவரை தி.மு.க உடனான கூட்டணி, மக்களுக்கு எதிர்காலத்தில் நன்மையைக் கொடுக்கும் கூட்டணி.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்