கழுகார் பதில்கள்!

படங்கள்: ஆ.முத்துக்குமார்

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

  ஜெயலலிதா தொடங்கி வைத்துள்ள மோட்டார் சைக்கிள் ஆம்புலென்ஸ் திட்டம் பற்றி..?


 ‘தி ஃபர்ஸ்ட் ரெஸ்பாண்டர்’ எனப்படும் ‘108 எமர்ஜென்ஸி மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ்’ என்ற திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 7-ம் தேதி கோட்டையில் தொடங்கிவைத்தார். மொத்தம் 41 மோட்டார் சைக்கிள்கள் சென்னையில் உலவ விடப்பட்டு உள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 142 அழைப்புகள் இவர்களுக்கு வந்து, பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றி உள்ளார்கள்.  சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் உள்ள நகரத்தில் ஆம்புலன்ஸ் போவதே சிரமமாக உள்ளது. ஆம்புலன்ஸுக்கு தகவல்போன பிறகும் நெரிசல் காரணமாக குறிப்பிட்ட இடத்துக்குப் போய்ச்சேர முடியவில்லை. இந்த மாதிரியான நேரத்தில் குறுகலான சந்துகள், போக்குவரத்து நெரிசலான தெருக்களுக்குப் போய் ஆபத்தான வர்களைக் காப்பாற்ற இந்த மோட்டார் சைக்கிள்கள் பயன்படுகின்றன. முதலுதவி சிகிச்சைக்கான உபகரணங்கள், ஆக்ஸிஜன் பேக் போன்றவைகளை இவர்கள் வைத்து உள்ளார்கள். முதலுதவியை இவர்கள் செய்கிறார்கள். மேலுதவி தேவை என்றால் ஆம்புலன்ஸுக்கு இவர்களே தகவல் அனுப்புகிறார்கள். இந்தத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தி வெற்றி பெற வாழ்த்துவோம்.

ஜி.விஜயராமன், திருச்சி.

 கூட்டணி அமைத்து வெற்றி வாகை சூடிய பின்னர், ‘எங்களால்தான் நீங்கள் வெற்றி பெற்றீர்கள்’ என்று பலரும் குற்றம்சாட்டுவார்கள். எனவே, இப்போதே ஜெயலலிதா தனித்து நிற்பதுதானே சரியானதாக இருக்கும்?


 இதேபோல் ஜெயலலிதா இதுவரை சொன்னது இல்லையா? 1991 சட்டமன்றத் தேர்தலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அ.தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு அனுதாப வாக்குகள் அதிகமாகக் கிடைத்தன. அடுத்த சில மாதங்களில் நடந்த அ.தி.மு.க-வின் மாநாட்டில், ‘எங்களது சொந்த செல்வாக்கால்தான் வென்றோம்’ என்று சொன்னவர் ஜெயலலிதா. கடந்த தேர்தலில் விஜயகாந்த் துடன் கூட்டணி வைத்துக் கொண்டார். அவருக்கு செல்வாக்கு இருப்பதாக நினைத்துத்தான் 41 இடங்களை ஒதுக்கீடு செய்தார். வென்று வந்ததும்,  ‘விஜயகாந்த்தால் ஜெயிக்கவில்லை’ என்றார். இதெல்லாம் அரசியலில் அனைத்து அரசியல்வாதிகளும் சொல்வதுதான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்