மிஸ்டர் கழுகு: “முதல்வரிடம்தான் பேச வேண்டும்!”

வீதிக்கு வந்த அரசு ஊழியர்கள்... இரண்டு வாரங்களாக இறங்கிவராத அரசு!50 லட்சம் ஓட்டு?

‘‘அரசு ஊழியர் போராட்டம், ஆட்சி​யாளர்​களைக் கிடுகிடுக்க வைத்துவிட்டது’’ என்றபடியே வந்தார் கழுகார். ‘‘பின்னணி என்ன?’’ என்றோம்.

‘‘ஜாக்டோ அமைப்பினர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்கள். அது​வரையில் அரசு ஊழியர் சங்கத்​தினரை கண்டுக்காமல் இருந்த அரசு, திடீரென சோம்பலை முறித்தது. ஐவர் அணி அமைச்சர்கள் அரசு ஊழியர் சங்கத்தினரை நேரில் அழைத்துப் பேச ஆரம்பித்தனர். அரசு ஊழியர் போராட்டத்தின் வேரே அரசியல்​தான். தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தினரும் அரசு ஊழியர்கள் சங்கத்தினரும் ஆரம்பத்திலேயே தலைமைச் செயலாளர் ஞான​தேசிகனிடம் வைத்த ஒரே கோரிக்கை, ‘முதல்வரை நேருக்கு நேர் சந்திக்கணும்’ என்பதுதான். அதற்கு அரசுத் தரப்பில் இருந்து பதிலே இல்லை. முதல்வருக்குப் பதிலாக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், பழனியப்பன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்தான் அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சங்கத் தலைவர்கள் சொல்வதை இவர்கள் வெறுமனே கேட்டுக்கொள்கிறார்கள். ஏதாவது கேள்வி கேட்டால், புன்னகையைத்தான் பதிலாகச் சொல்கிறார்களாம். ‘அம்மாகிட்டே சொல்றோம்’ என்கிற ஒரே வார்த்தையைத் தவிர, வேறு எதையும் இந்த அமைச்சர்கள் சொல்வதில்லை. இதுதான் அரசு ஊழியர்கள் சங்கத்தினருக்கு எரிச்சலை உண்டுபண்ணியிருக்கிறது.”

‘‘இன்னுமா முதல்வரிடம் விவரத்தைச் சொல்லாமல் இருப்பார்கள்?’’

‘‘தலைமைச் செயலகத்தின் கருத்தரங்க அறையில்தான் இந்தச் சந்திப்பு நடந்தது. அப்போது தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் கணேசன், ஐவர் அணியினருக்கு ஒரு கொக்கிப் போட்டு பேசினாராம். ‘முதல்வர் பதவியில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை பலமுறை சந்தித்து கோரிக்கைகளைச் சொல்லியிருக்கிறோம். அவரை நிதி அமைச்சர் என்கிற வகையிலும் சந்தித்துச் சொல்லியிருக்கிறோம். மின்துறை அமைச்சருக்கு எங்கள் பிரச்னைகள் நல்லாவே தெரியும். இப்படி எல்லாருக்கும் தெரிந்திருந்தும் எங்களுக்கு எந்த நன்மையும் நடக்கலையே?’ என்றாராம். அவர் சொன்னபோது அமைச்சர்கள் முகத்தில் ஈயாடவில்லை. ஒரு கட்டத்தில், அரசு ஊழியர் சங்க முக்கியப் பிரமுகர்கள்,   ‘உங்க எல்லாரையும்தான் அடிக்கடி பார்க்கிறோம்? கோரிக்கை வைக்கிறோம். எதுவும் நடக்கவில்லை. முதல்வரிடம் முறையிட்டாலாவது நன்மைகள் நடக்கும் என நினைக்கிறோம். முதல்வரை எப்போது பார்க்கவிடுவீர்கள்?’ எனக் கேட்டாராம். சந்திப்பு முடிந்தபிறகு, சங்கத் தலைவர் ஒருவரிடம் அமைச்சர் ஒருவர் வாஞ்சையுடன், ‘கொஞ்சம் நிலைமையை புரிஞ்சுக்கோங்க’ என்று சொல்லி சில விஷயங்களைச் சொன்னாராம். சமாதானம் ஆகாமல் வெளியே வந்தவர்கள், ‘முதல்வர் ஜெயலலிதா கோட்டைக்கு வந்து காணொலிக் காட்சிகள் மூலம் கட்டங்கள், பாலங்கள் எல்லாம் திறந்துவைக்கிறார். ஏன் அரசு ஊழியர்களைச் சந்திக்க மறுக்கிறார்?’ எனக் கேள்வி எழுப்பு​கின்றனர்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்