பெரியோர்களே... தாய்மார்களே! - 65

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

‘‘காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீதான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணில்
பாய்ந்திடும் எழுச்சி நீதான்!’’


- என்று இதழியலுக்கு இலக்கணம் தந்தார் பாவேந்தர் பாரதிதாசன். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கிற பத்திரிகைகள்தான் மற்ற மூன்று தூண்களில் படிந்துவிட்ட தூசிகளைக்கூட துடைக்கும் தகுதி பெற்றவையாக இருக்கின்றன. ஆனால், இன்று பத்திரிகைகளை, பத்திரிகையாளர்களை ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் அப்படி நினைப்பதும் இல்லை... மதிப்பதும் இல்லை. தாங்கள் உதிர்க்கும் அபத்தமான பொன்மொழிகளை, தாங்கள் வெளியிடும் உதவாக்கரை அறிவிப்புகளை, தாங்கள்செய்யும் பப்ளிசிட்டி கும்மாளங்களை மட்டும் இந்தப் பத்திரிகைகள் வெளியிட்டால்போதும் என்று ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் நினைக்கிறார்கள். அப்படி நடந்துகொள்ளும் பத்திரிகைகளை, பத்திரிகையாளர்களை மட்டுமே மதிக்கிறார்கள். ஆனால் பெருந்தலைவர் காமராஜர், அனைத்துப் பத்திரிகைகளையும் பத்திரிகையாளர்களையும் சக பயணியாக நினைத்து நடத்தினார்.

‘நியூயார்க் டைம்ஸ்’ அந்தோணி லூகாஸ், ‘பிளிட்ஸ்’ கே.ஏ.அப்பாஸ், ‘மிரர்’ அர்ஜுன் தேவ், சிங்கப்பூர் ‘தமிழ்முரசு’ ராதாகிருஷ்ணன், ‘பாரதம்’ பி.எஸ்.ராஜகோபாலன், ‘மெயில்’ கணபதி, ‘மக்கள் குரல்’ மு.காமராஜுலு, எம்.சண்முகவேல், ‘நியூவேவ்’ கிரிஷ்மாத்தூர், சக்ரவர்த்தி ஐயங்கார், ஏ.கே.வெங்கடேசன், ‘தினமணி’ ஏ.என்.சிவராமன், ஆர்.ராமச்சந்திர ஐயர், ‘இந்து’ எஸ்.சீனிவாசன், ‘சுதேசமித்ரன்’ என்.எஸ்.பார்த்தசாரதி, ‘நவசக்தி’ சங்கமேசுவரன், ‘நவ இந்தியா’ மு.நமசிவாயம், முருக.தனுஷ்கோடி, அருண் என்ற அருணாசலம், நா.கிருஷ்ணமூர்த்தி, ‘தினச்சுடர்’ ஆர்.சங்கரநாராயணன், ‘தினசரி’ டி.எஸ்.சொக்கலிங்கம், ‘தினசரி’ டி.சடகோபன், ‘பாரததேவி’ முருகன், ‘நவமணி’ ராமலிங்கம், ‘அலை ஓசை’ நாராயணன், எம்.பி.மணி, எ.பரசுராமன், ‘ஜனசக்தி’ அறந்தை நாராயணன், ‘மெயில்’  எஸ்.ராமநாதன் ‘சண்டே டைம்ஸ்’ பாலு, ‘நவசக்தி’ அ.சத்தியமூர்த்தி, சாவி, ‘துக்ளக்’ சோ, ‘கல்கண்டு’ தமிழ்வாணன், ‘சிவாஜி ரசிகன்’ சின்ன அண்ணாமலை புகைப்படக் கலைஞர் ‘சுபா’ சுந்தரம், ‘தினத்தந்தி’ சோமு, ‘ஜனயுகம்’ மயிலை நாதன், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வி.கே.நரசிம்மன், ‘நாத்திகம்’ பி.ராமசாமி, ‘பி.டி.ஐ’ கே.ஆர்.நாயர், ‘சமாச்சார்’ கே.வி.நாராயணன், ‘செய்தி’ பழ.நெடுமாறன், ‘தீபம்’ நா.பார்த்தசாரதி,  ‘சுதேசமித்ரன்’ எஸ்.வின்சென்ட், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ என்.வேம்புஸ்வாமி, ‘அண்ணா’ வீ.ரங்கநாதன், ‘ஆனந்த விகடன்’ ராவ் என்ற ராகவேந்திர காவளே, ‘அம்பி’ என்ற ஜகந்நாதன்... இவர்கள் அனைவருமே காமராஜரின் நண்பர்கள். தோழர்கள். சகாக்கள். பத்திரிகையாளர்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்