“அம்மா பேனரை அகற்றினால் ஆத்திரம் வரத்தான் செய்யும்!”

இன்ஸ்பெக்டரை மிரட்டிய அ.தி.மு.க. நிர்வாகி

ன்ஸ்பெக்டர் ஒருவரை ஆளும் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஒருமையில் திட்டி, கொலை மிரட்டல்விடுத்து இருப்பது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.அதேநேரத்தில் அதிகாரத்துக்கு அடிபணியாமல் துணிச்சலாக ஒரு போலீஸ் அதிகாரி பேசியது பெருமையாகவும் உள்ளது.

களியக்காவிளை பேருந்து நிலையம் அருகே, ஜெயலலிதாவின் பிறந்தநாள் வாழ்த்து பேனர்களை அ.தி.மு.க-வினர் வைத்திருந்தனர். பேனர்களால் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டதுடன், பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாமல் சிரமப்பட்டனர். எனவே, “பேனர்களை இடையூறு இல்லாமல் வையுங்கள்’’ என்று அ.தி.மு.க நிர்வாகிக ளிடம் இன்ஸ்பெக்டர் சாம்சன் அறிவுறுத்தி உள்ளார். ஆனால், அதை அவர்கள் காதில் வாங்கிக்கொள்ளாமல் அங்கேயே வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். இன்ஸ்பெக்டர் சாம்சன் இந்த பேனரை அகற்றி இருக்கிறார். சிறிது நேரம் கழித்து அ.தி.மு.க ஒன்றியச் செயலாளரான உதயகுமார் என்பவர், இன்ஸ்பெக்டரை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘‘யாரைக் கேட்டு அம்மாவின் பேனரை அகற்றினாய்? எனக்கு ரத்தம் கொதிக்குது. ராஸ்கல். என்னை அங்கே வர வெச்சுடாதே.. இன்னும் ஒரு மணி நேரம் டைம் தாரேன். அதற்குள் அதே இடத்தில் மரியாதையா வெச்சிடு” என்கிற ரீதியில் எகிறி உள்ளார். இருவருக்கும் இடையில் நடந்த உரையாடல் வீடியோ, வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவியது. இன்ஸ்பெக்டரை மிரட்டிய உதயகுமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்