வீதிக்கு வந்துள்ள அரசு ஊழியர்கள்... ஸ்தம்பித்துக்கிடக்கும் அரசு நிர்வாகம்!

5 ஆயிரம் கோடி வரி வசூல் பாதிப்பு

அ.தி.மு.க அரசின் ஆட்சிக்காலம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவரும் நிலையில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள், செவிலியர்கள், கௌரவப் பேராசிரியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடி வருகிறார்கள். இதனால், தமிழகம் முழுவதும் பல அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. நிர்வாகப் பணிகள் ஸ்தம்பித்துப் போயிருக்கின்றன.

‘‘புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். 30 ஆண்டுகளாகத் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றுபவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’’ என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 6-ம் தேதி முதல், மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ‘புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்வோம்’ என்று அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து இருந்தனர். நாடாளுமன்றத்தில் புதிய பென்சன் திட்ட மசோதாவுக்கு எதிராக அ.தி.மு.க எம்.பி-க்கள் வாக்களித்தனர். ஆனால், ஆட்சி முடியும் தருவாயிலும்கூட புதிய பென்சன் திட்டத்தை அ.தி.மு.க அரசு ரத்துசெய்யாதது, அரசு ஊழியர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி, “தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும், 68 துறைவாரியான சங்கங்களும் இணைந்து பிப்ரவரி 10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்