“காட்டுமிராண்டித்தனமாக அடைத்து வைக்கிறார்கள்!”

கோபத்தில் மாற்றுத்திறனாளிகள்!

மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு, 40 சதவிகிதம் ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகிய 4 அமைப்புகள் சென்னை எழிலகத்தில் கடந்த 8-ம் தேதி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன.

இதில் 500-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைதுசெய்து வேப்பேரியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். அங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால், சாலை மறியலில் அவர்கள் ஈடுபட்டனர். சென்னையின் பிற பகுதிகளிலும் போராடிய மாற்றுத்திறனா ளிகளைக் கொண்டுவந்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அடைத்து வைத்தனர். இந்த நிலையில், 18-ம் தேதி காலை வேலூரைச் சேர்ந்த குப்புசாமி என்கிற மாற்றுத்திறனாளி உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்துள்ளார். இதனால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்​கான சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நம்புராஜனிடம் பேசினோம். “தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் 40 சதவிகிதம் ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்கப்படுகிறது. இங்கு, ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கே சமூகநலத் துறை மாற்றுத்திறனாளிகளைக் கடுமையாக அலைக்​கழிக்கிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து கடந்த 20 ஆண்டுகளாக, ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்​திறனாளி​களுக்கு வேலை கிடைக்காத நிலை உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். வேலை​வாய்ப்பு இல்லாததால் வருமானத்துக்கு வழியில்லாமல் பிளாட்பாரங்களில் தங்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்