வாரிசுகளுக்குத் தொகுதி கேட்கும் கோஷ்டித் தலைவர்கள்!

கொந்தளிக்கும் கதர்சட்டையினர்

ஒரு தலைமையின் கீழ் செயல்படுவது என்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு மட்டுமல்ல, அதன் தொண்டர்களுக்கும் சரிப்படாத விஷயமாகிவிட்டது. டெல்லி தலைமை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இளங்கோவனை நியமித்து இருந்தாலும், தனது ஆதரவாளர்களுக்கு மட்டும்தான் இளங்கோவன் தலைவராக இருக்க முடியும். சிதம்பரத்தின் ஆதரவாளர்களையோ, தங்கபாலுவின் ஆதரவாளர்களையோ அவர் கட்டுப்படுத்த முடியாது, கேள்வி கேட்க முடியாது.

இது உட்கட்சி ஜனநாயகம் என ராகுலே சொல்லிவிட்டார்.  தி.மு.க. உடனான கூட்டணி உறுதியான நிலையில் தொகுதிகளைப் பெறும் விஷயத்திலும் கோஷ்டித் தலைவர்கள் களம் இறங்கியிருக்கின்றனர். அதிலும் முக்கியமாக, தங்களது வாரிசுகளைக் களம் இறக்க கோஷ்டிகளின் தலைவர்கள் தயாராகிவிட்டனர்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வே.ரா. இவர் கட்சியின் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவராக இருக்கிறார். ஈரோடு மாவட்டத்தின் ஒரு தொகுதியில் இவரைக் களம் இறக்கத் தயாராகிவிட்டார். கட்சிப் பொறுப்பில் ஆக்டிவ்வாக இருப்பதை ஒரு தகுதியாக முன்னிறுத்தி மேலிடத்தில் இளங்கோவன் வாய்ப்புக் கேட்கிறாராம். ப.சிதம்பரம், தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலே தனக்குப் பதிலாக சிவகங்கை தொகுதியில் நிறுத்தி, முன்னோட்டம் பார்த்துவிட்டார். அந்தத் தேர்தலில் கார்த்திக் தோற்றுவிட்டார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், காரைக்குடி தொகுதியில் கார்த்தி சிதம்பரத்துக்கு வாய்ப்பு கேட்க உள்ளார் சிதம்பரம். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருக்கும் கார்த்தி, ‘கூட்டணி மந்திரி சபைக்கு தி.மு.க ஒப்புக்கொண்டால்தான், தேர்தலில் போட்டியிடுவேன்’ என்கிற நிபந்தனை போடுகிறாராம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்