ராமானுஜத்தை சுற்றும் சந்தேக வளையங்கள்...

இளம் ஐ.பி.எஸ். திடீர் மரணம்!

சென்னை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சில மாதங்களுக்கு முன்பு இடம் மாற்றப்பட்ட இளம் ஐ.பி.எஸ் அதிகாரி ஹரீஸ், எழும்பூரில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான மெஸ்ஸில் பிப்ரவரி 18-ம் தேதி இறந்துகிடந்தார். இதுகுறித்து எழும்பூர் போலீஸார், ‘இயற்கைக்கு மாறான மரணம்’ என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மாரடைப்பு என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் ஹரீஸின் நுரையீரல், இதயம், கல்லீரல், இரைப்பை ஆகியவை தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பிரியாணி பொட்டலம், மது பாட்டில்கள், மாத்திரைகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழ்நிலையில், ஹரீஸ் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், முன்னாள் டி.ஜி.பி ராமானுஜமும் ஒரு காரணம் என்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான பிரத்யேக வாட்ஸ்அப் குரூப் (டாப் காப்ஸ்) ஒன்றில் ஸ்டேட்டஸ் போடப்பட்டு இருந்தது. ஹரீஸின் நண்பரும், அவருடைய பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியுமான ஒருவரால் போடப்பட்ட அந்த ஸ்டேட்டஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்