அறிவுசார் துறைகளின் அலங்கோலம்!

5 ஆண்டு ஆட்சி - ஜூ.வி. ஸ்கேன்

புத்தகங்களை மூட்டை கட்டு... எழுத்தாளர்களை மிரட்டு... செம்மொழி உயராய்வு மையத்தை ஓரங்கட்டு... நூலகங்களை மியூஸியம் ஆக்கு... என்கிற போக்கில்தான் அ.தி.மு.க அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் செயல்பட்டுள்ளது.

அலங்கோலத்தில் அண்ணா நூலகம்!

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம், தென் ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகக் கருதப்படும் சிங்கப்பூர் நூலகத்தைப் போன்று உருவாக்கப்பட்டது. 2010-ம் ஆண்டு, ரூ.172 கோடி செலவில், 3.75 லட்சம் சதுர அடி பரப்பளவில், 9 தளங்களுடன், ஒரே நேரத்தில் 5,000 பேர் படிக்கும் வசதியுடன் கடந்த தி.மு.க ஆட்சியில் உருவாக்கப்பட்டது. 12 லட்சம் புத்தகங்களை வைக்கும்

வசதி, யுனெஸ்கோவின் உலக இணைய நூலகத்துடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் வசதி, பார்வையற்றோருக்கான 500-க்கும் மேற்பட்ட பிரெய்லி புத்தகங்கள், போட்டித் தேர்வுகளுக்காகப் படிப்பவர்களுக்குத் தனி அரங்கம், குழந்தைகளுக்குத் தனிப்பிரிவு, உட்கார்ந்த இடத்தில் இருந்தே கணினி மூலம் புத்தகத்தைத் தேடும் வசதி, அரங்கம் என அமெரிக்காவில் உள்ள ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ தரத்துக்கு ஈடாக அண்ணா நூலகம் உருவாக்கப் பட்டது. இதற்கு, ‘தெற்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம்’ என்ற பெருமையும் கிடைத்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்