சேலம் தி.மு.க. டமால்... டுமீல்!

ராஜா Vs ராஜேந்திரன்

சேலம் தி.மு.க-வில் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள், இப்போது சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரனால் ஓரங்கட்டப்படுகிறார்கள் என ஒரு தரப்பினர் புலம்புகிறார்கள். இல்லை... இவர்களெல்லாம் சேர்ந்து பனமரத்துப்பட்டி ராஜேந்திரனை புறக்கணிக்கிறார்கள் என இன்னொரு தரப்பினர் புலம்புகிறார்கள். சேலம் தி.மு.க-வின் உச்சகட்ட யுத்தம் இது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

‘‘கடந்த 10 நாட்களில் சேலம் மத்திய மாவட்டத்தில் எ.வ.வேலு, பட்டிமன்ற நடுவர் லியோனி, துரைமுருகன் எனக் கட்சி தலைமைப் பொறுப்புகளில்  உள்ளவர்களைவைத்து மத்திய மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள் போடப்பட்டன. இந்தக் கூட்டங்களுக்கு மாநகராட்சிக்குள் இருக்கும் தி.மு.க-வில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் யாரும் வரவில்லை. ஏதோ ஒரு புதிய கட்சியின் பொதுக்கூட்டம் போலத்தான் நடைபெற்றது. இதற்குக் காரணம், கோஷ்டிப் பூசல்தான். இந்தப் பிரச்னைகளில் தி.மு.க தலைமை தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், வரும் சட்டமன்றத் தேர்தலில் சேலத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கும் சிக்கல்தான்’’ எனக் குமுறுகிறார்கள் சேலம் தி.மு.க புள்ளிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்