டிக்கு... டிக்கு... டிக்குனு... டக்கு... டக்கு... டக்குனு!

பேச்சு முழுவிவரம்

எச்சரிக்கை: காஞ்சிபுரம் மாநாட்டில் தே.மு.தி.க-வின் தேர்தல் பாதையை அறிவிக்கப்போவதாகச் சொன்னார் விஜயகாந்த். அவர் பேச்சு அப்படியே... அவர் பேசிய மாதிரியே எழுதினால் இப்படித்தான் வருகிறது. வாசகர்கள் அவசர சூழ்நிலையில் படிக்க வேண்டாம். கவனமாகப் படிக்கவும்.

டக்கு... டக்கு... டக்குனு!

‘‘பேரன்பு கொண்ட பெரியோர்களே... தாய்​மார்களே! அன்புகொண்ட சகோதர, சகோதரிகளே! என் உயிரினும் மேலோன அன்பு நெஞ்சங்களே! காஞ்சி குலுங்கட்டும் காலம் கனியட்டும்! ஆட்சி மலரட்டும்! காஞ்சி குலுங்கிருச்சு. அதனாலதான்… எந்தப் பக்கம் திரும்பினாலும் ஜெயலலிதா. காஞ்சி மாவட்டச் செயலாளர் அனகை முருகேசன் அவர்களுக்கும் இந்த மாநாட்டை குறைந்த நாட்களில் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், அனகை முருகேசன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வர்ற வழியெல்லாம் மக்கள் தரையில உட்கார்ந்து சாப்பிடுறாங்க. அவங்க எதுக்காக தரையில உட்காரணும்? விதியா? இல்லை விதிதான். ஏனென்றால், விஜயகாந்த்தைப் பார்க்க வேண்டுமே! விஜயகாந்த்தைப் பார்த்திருக்கோம். தலைவர் விஜயகாந்த்தைக் கேட்டிருக்கோம். எதற்காகச் செல்கிறீர்கள்? செல்வோம்யா உனக்கென்னயா அப்படின்னு நம்ம பாட்டுக்கு வந்துகிட்டு இருப்போம். அதைப் பார்த்துப் பார்த்து என் மனசெல்லாம் எங்கு தெரியுமா பறந்துச்சு? எங்கோ பறந்துச்சு. ஏனென்றால், நான் உங்களையெல்லாம் பார்க்க வர்றேன்னு நினைக்கல. ஏன் அப்படி என்ன நடந்தது? அவங்கள பார்த்து கையெல்லாம் ஆட்டுனேன். அதை நீங்க கவனிக்கல. ஏன்னா நான் வருவேன்னு உங்களுக்குத் தெரியாது. எந்த வண்டியில வருவேன்னு உங்களுக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா நீங்களும் கையாட்டி இருப்பீங்க பதிலுக்கு. நீங்க கையை ஆட்டி இருப்பீங்க… பதிலுக்கு டங்கு… டக்கு, டங்கு… டக்கு, டங்கு… டக்குன்னு ஒவ்வொருத்​தரும் கொட்டு அடிச்சிகிட்டிருந்தீங்களே. அதை​யெல்லாம் பார்க்கும்போது எனக்கு எப்படி இருந்திச்சு. அவங்கல்லாம் என்னை விட்டுருப்​பீங்களா? நீங்களும் டங்கு... டக்கு... டங்கு... டக்குன்னு, நானும் உங்களோட சேர்ந்து ஆடிக்கிட்டுதான் வந்திருப்பேன். ஆடிகிட்டு இவ்வளவு தூரமா வந்துகிட்டு இருக்க முடியும்? இவ்வளவு தூரம் வந்துகிட்டு இருக்கணும். என்ன பண்றது? என்னோட தொண்டர்க்கு விஜயகாந்த் தலைவன். தலைவன் எவ்வழியோ அவ்வழி தொண்டன். தொண்டன் எவ்வழியோ அவ்வழியே தலைவன். ஏன் வரக் கூடாது என்பதை நீங்கள்தான் மாற்றி இருக்கிறீர்கள். மாற்றிக்காட்டி காஞ்சி குலுங்கட்டும்ன்னு சொன்னா… காஞ்சி குலுங்கிடுச்சே! இதற்கு மேல என்ன வேணும்? ஏன்னா…. என் தொண்டர்களைப் பற்றி எனக்குத் தெரியும். பார்த்தசாரதி அவர்கள் சொன்னபடி, தலைமை கழகச் செயலாளர் பார்த்தசாரதி இங்க உட்கார்ந்திருக்கார். சொன்னார் இல்ல. வெட்டிவா என்று சொன்னால், தலையைக் கொண்டுவந்து விடுவார்கள் என் தொண்டர்கள். அப்படிப்பட்ட தொண்டர்களைப் படைத்த நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? நாங்க அப்படிப்பட்ட தொண்டர்கள். ஆனா, ராணுவம்… ராணுவம் மாதிரி இருக்கக்கூடிய என் தொண்டர்கள், நான் சொல்றது அனைத்தையும் கேட்பான்… கட்டுப்படுவான். உட்காருன்னா உட்காருவான். எழுந்திருன்னா எழுந்திருப்பான். அடின்னு சொன்னா அடிப்பாங்க. உதைன்னு சொன்னா உதைப்பாங்க. யாரு சாப்பிட கூப்பிட்​டாலும் சாப்பிட மாட்டாங்க. அப்படி​பட்டவங்கதான் என்னுடைய தொண்டர்கள். ஏன் இதைச் சொல்கிறேன் என்பதை நீங்கள் ஒரு நிமிடம் சிந்தியுங்கள்!

‘‘என் குடும்பத்தைப் பத்திச் சொல்றேன்!”

என்னுடைய தொண்டர்களைப் பத்தி நான் அடிக்கடி பெருமையா என் மனைவிகிட்ட சொல்லு​வேன். என் பசங்ககிட்டயும் சொல்லுவேன். தெரியாது... தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்… என் மனைவிக்கு நன்றாகத் தெரியும். என் பசங்களுக்கு சொல்லிச் சொல்லி வளர்க்கறதுதானே? பசங்க உங்களுக்குத் தெரியும். இருந்தாலும் சொல்லிடுறேன். ஒருத்தன் விஜயபிரபாகரன். இப்பதான் பி.ஆர்க். டெல்லிக்குப் போய்ட்டு இப்பதான் வந்தான். டெல்லியில பி.ஆர்க் படிச்சிட்டு சர்ட்டிபிகேட் வாங்கணும்னு இங்கயும் சர்ட்டிபிகேட் கொடுத்​துட்டாங்க. அங்க போய் எழுதிக் கொடுக்கணும்னு இப்ப எழுதியும் கொடுத்திட்டு வந்திட்டான். இப்பதான் லட்டர் வந்திடுச்சு, அதனால போய் குடுத்தேன்னான். அடுத்தது சண்முகப்பாண்டியன். அவன்தான் நடிகர். அந்த சண்முகப்பாண்டியன் ‘தமிழர்’ என்று சொல்லுகின்ற படத்தின் கதாநாயகன். இதற்கு முன்னாடி ‘சகாப்தம்’னு ஒரு படம் வந்துச்சு. அதுல அவன்தான் கதாநாயகன். இதையெல்லாம் ஏன் நான் இங்க சொல்றேன்னு... சொல்லாததுல என் மனைவியின் பெயர் பிரேமலதா. ஏன் இதையெல்லாம் சொல்லணுங்கறதுல, என்னை ஒருத்தரும் சொல்லல. எனக்குக் குடும்பமே உலகம். நான் வாழ்ந்து பணம் சம்பாதிக்கணும்ங்கறதுல எனக்கு ஆசையே கிடையாது. என் ரெண்டு பசங்களும் என்னைக் கண்ணுலயே வச்சு என்னைக் காப்பாத்துவாங்களே. என் பொண்டாட்டி கவலைப்பட. நானும் என்மனைவியும்,  இவ்வளவு கூட்டம் இருக்கே, ஒரு நேரம் நீங்க சோறு… எனக்கு ரொம்ப வேணாம். கொஞ்சம் பழைய சோறும், ஒரு வெங்காயத்தையும் நான் கடிச்சிகிட்டு, நானும் பிரேமலதாவும் போய்கிட்டே இருந்தா போட மாட்டீங்களா சாப்பாடு. இதைதான்…. இதுதான்… பாருங்க எப்படி கத்துறீங்க. இதுதான் வேணும் உற்சாகத்துக்​காக. ஆனால், பேப்பர்ல எழுதுவாங்க உற்சாகத்துக்கான உண்மையை. என் மனைவி சொல்லிச்சே. ஏன்னா இங்க ஜால்ரா அடிக்​கறாங்க. ஜால்ரா அடிக்கிற பத்திரிகையும், ஊடகங்களும் அதிகம்.

‘‘என்னோட கேள்வி வேற மாதிரி இருக்கும்?”

என்னய்யா ஜெயலலிதா? ஜெயலலிதா ஆட்சியில போன 13 தேர்தலை சந்திச்சுதா இந்த அம்மா?

இதைவிட இவங்க பர்கூர்னு ஒரு தொகுதி. இதுல இவங்க ஜெயிச்சாங்களா? ஏன் தோத்தீங்க. நத்தம்… நத்தம்(சத்தமாகச் சொல்கிறார்). சொல்ல முடியுமா? நீ வந்து எங்களை ஜீரோங்கற. ஆண்ணா அப்படிங்கறதுதான் ஏன் வாயில வருது. ஏன்யான்னு மந்திரி வயசுல அதிகமா இருந்தாலும், என்னைவிட வயசுல அதிகமா இருந்தவர் சொன்னாரு. ஜீரோ சட்டசபைங்கறதால நீங்க தப்பிச்சீங்க. நான் போயிருந்தா நிகழ்ச்சியில, யாரு ஜீரோ? உங்க அம்மா ஜீரோவா? நீ ஜீரோவா? உங்க தலைவி ஜீரோவான்னு நான் கேட்டிருப்பேன். நான் சட்டசபைக்குப் போகல. போயிருந்தா என்னுடைய கேள்வி வேறமாதிரி இருக்கும். நீதான் ஜீரோ. 2004 தேர்தல்ல 40 சீட்டுல தி.மு.க வந்துச்சே. அப்ப நீங்கதான் ஜீரோ. யாரை ஜீரோன்னு எங்களைப் பார்த்து ஜீரோங்கறீங்க. போனதடவை 13 இடைத்தேர்தல்ல நீங்க தோத்தீங்களே அது ஜீரோ. உங்ககிட்ட இருப்பது ஜீரோ பன்னீர்செல்வம்தான். அதே ஜீரோ பன்னீர் செல்வம் இருக்குற வரைக்கும் இந்த நாடும் உருப்படாது. அந்தக் கட்சியும் உருப்படாது. ஏனென்றால் சைபர் ஓ.பன்னீர்செல்வம். ஓ என்பது என்ன? சைபர் என்பது என்ன? ஜீரோ என்பதுதான் சைபர். ‘ஓ’ங்கறது நாம என்ன சொல்வோம்? என்னடா இப்படி போட்டா... முட்டைய வாங்கி வந்திருக்குறன்னு சொல்வோம் இல்லை. கோழி முட்டையிலும் இவங்க லஞ்சம் வாங்கி இருக்காங்க. கொள்ளையடிக்கணும்னா கொள்ளையடி! மக்களைத் திருத்தணும்ங்கண்ணே!”

‘‘டிக்கு... டிக்கு... டிக்குன்னு ஆடுது!”

இதுல வேற சாலை பாதுகாப்பு விழா என்னங்கறது? தெருவுல போற இவர் வண்டியெல்லாம் டிக்கு டிக்கு… டிக்கு... டிக்குன்னு ஆடுது. இந்த வண்டியே வேணாம்னு பழைய வண்டியில போனா, டயர்ல காத்து இருக்குதா? காத்து கரெக்டாதானே வச்சிருக்கேன். ஏன்டா ஆடுதுன்னா ரோடு சரியில்ல. இதுல சாலை பாதுகாப்பு வாரம்னு இந்த அம்மா வச்சிருக்கா? என்னய்யா பாதுகாப்புங்குற… இங்கிருக்குற செல்போன் டிக்கு... டிக்குன்னு குதிச்சு பக்கத்து பாக்கெட்ல போய் செல் விழுதாம். அந்த அளவுக்கு மோசமான சாலையை வச்சுகிட்டு சாலை பாதுகாப்பு விழா. சரி 20 லட்சம் லிட்டரு, அதாவது 20 லிட்டர் தண்ணி ஃப்ரியா இப்ப குடுக்கறேன்னு ஏழை மக்கள்கிட்ட சொல்றாங்க. இப்ப சுத்திகரிக்கப்பட்ட தண்ணீன்னு, அப்ப நீங்க எங்க போனீங்க. அதை கடைசியிலதான் அறிவிக்க வேண்டுமா? அடுத்த தடவை யார் ஆட்சிக்கு வந்தாலும், இல்ல விஜயகாந்த் அவர்களேன்னு வச்சிக்குவமே? நாங்க ஏற்கெனவே கொண்டுவந்த திட்டம்னு சொல்றதுக்கா? இதுலதான் போன திட்டங்கள்.

‘‘எதுக்காகத் திரும்பணும்?”

ஊழல் செய்த கை நிற்காது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த ஆட்சி. ஏன் இதெல்லாம் சொல்றேன்னு நீங்க எல்லாம் நினைக்கணும். உண்மையைச் சொல்லுகிறேன். நான் அதிகபட்சமா பேசல. அப்ப சட்டசபைக்குள்ள வரல. இனிமே சட்டசபைக்குள்ள வரலன்னு சொல்லிட்டு நான் வந்துட்டேன். எல்லாரும் என்ன சொன்னாங்க? நீங்களும் சட்டசபைக்கு வராதீங்க. வந்துட்டா அவ்வளவுதான் நீங்க வரவே வராதீங்க. எத்தனை பேரு எம்.எல்.ஏ இல்லன்னு சொல்றாங்க. நீங்க வரவே வராதீங்கன்னாங்க. நான் போகல. சட்டசபை ஏன்னா சட்டசபை செத்துடுச்சேன்னு சொன்னாங்க. சட்டசபை செத்தா நான் எப்படி போக முடியும்? சட்டசபையில பழ.கருப்பையா சொன்னமாதிரி ஒருத்தன் தூங்கிகிட்டு இருந்தான். ஏங்கண்ணே எனக்குக்கூட கைதட்டணும், எதுக்குன்னான். நீ இப்படி கையை வச்சிக்க. அப்புறம் டேபிளைத் தட்றான்னேன். எல்லாம் டேபிளைத் தட்டினா இவங்களும் டேபிளைத் தட்டிக்கிட்டே இருப்பாங்க. எதுக்கு தட்றாங்கன்னே தெரியாது. (கூட்டத்தினைப் பார்த்து கைகளை ஆட்டிக்கொண்டே) கையை ஆட்டணும் அவ்வளதுதானே. ஒரு நிமிசம்… ஒரு நிமிசம்… நான் வந்து நேரா… அதான் இவங்க இப்படி இப்படி திரும்பனா எப்படி பேச முடியும்? எப்பவுமே மேடைப்​பேச்சு இருக்கறவங்க பக்கத்துல இருக்கறவங்கள பார்க்காதீங்க. நீங்க உங்க கண்பார்வையை தூரமா வச்சிக்கங்கன்னுவாங்க. எனக்கு நடிக்க வராது. எனக்கு நடிக்கத் தெரியாது. மக்களை ஏமாற்றத் தெரியாது. எதுக்காகத் திரும்பணும். பேச்சு மாறணும். மாறாது அது பத்தியெல்லாம் பத்திச் சொல்லாதே. என்ன பேச்சு மாறப்போது? அவங்க எத்தனை தடவ டாட்டா காட்டினாலும் இங்கிட்டு அவ்வளவுதானே? அதுக்கு மேல யாரும் கைய ஆட்ட மாட்டாங்க. நீங்க பேசுனாலும் கேட்க மாட்டான். எனக்குப் பார்க்கத் தெரியாது. நடிக்கத் தெரியாது. சினிமாவுல வேணும்னா விஜயகாந்த் நடிக்க முடியும். மக்கள்கிட்ட நடிக்கணும்னா.... (நாக்கு குழைய ஏதோ சொல்கிறார்!) உங்கம்மா எதுக்கு நடிக்கணும்? நான் ஒரு லட்சம் தொண்டர்களை வச்சிகிட்டு என்ன பண்றது?

‘‘அடகு வைக்கச் சொல்றியா?”

சரி தேர்தலில் என்ன… ஒரு குறிப்பிட்ட அறிக்கைதான். இவங்க விஜயகாந்த் என்னன்னு சொல்வார்? விஜயகாந்த் ரேட்டை கூட்டிவிடுவாரா? விஜயகாந்த் இடத்தைக் கூட்டிவிடுவாரா? விஜயகாந்த்துக்கு பயமா? ஏன் மெளனம். இதெல்லாம் நீங்க பத்திரிகைகாரங்க செய்யுறது. விஜயகாந்த் தெளிவாக, அமைதியாக, அற்புதமாக யோசிச்சு கொண்டுதான் இருக்கிறேன். ஊழலற்ற மக்களை எங்கு கொண்டுபோய் விடச்சொல்றீங்க? யார்கிட்டயாவது அடகு வைக்க சொல்றீயா? அடகு வச்சதெல்லாம் எனக்குப் போதும். என் தொண்டர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டான்ங்​கறது எனக்குத் தெரியும். அவங்களை எப்படியெல்லாம் விலைக்கு வாங்கலாம்னு நினைச்சீங்கன்னு தெரியும். அதை நீங்க சொல்லணும் சொல்லணும்ங்கறீங்க. நான் சொல்றேன்னு என்னைக்​காவது சொல்லியிருக்கேனா பார்த்துக்​கங்க. நான் சொல்றேன்னு சொல்லியிருக்கேனா? இல்லை… இல்லை!

‘‘பத்திரிகைகாரங்க திரும்பிப் பாருங்க!”

 சரி உங்ககிட்டயே கேட்குறேன். நான் கூட்டணிக்குப் போவோமா, வேண்டாமா? அதைச் சொல்லுங்க பார்ப்போம். என்னய்யா வேண்டாம் வேண்டாம்ங்கறீங்க. வேண்டாம்ங்கறாங்க, பத்திரிகை​காரங்க வேணும்னா திரும்பிப் பார்த்துக்கங்க. அப்ப நான் என்ன சொல்றது. இதுவந்து ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இதுக்கு பேர் என்ன? எல்லாப் பக்கமும் கை காட்றாங்க. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்ன்னு எல்லா மாவட்டச் செயலாளரை அழைத்துப் பேசுகிறேன். நாளையில இருந்து விருப்பமனு நேர்காணல். அதை நான் பார்த்து கேட்டுக்குறேன். நீங்க ஊருக்குப் போய்ச் சொல்லுங்க. அந்த மாவட்டச் செயலாளர்கிட்ட நான் எப்ப வேணுமோ கேட்டுக்குறேன். என் கட்சிக்காரங்கள அடகா வைக்கச் சொல்றீங்க? நான் விரும்பல. ஆனா அவங்க கண்ணை மூடிகிட்டு கிணத்துக்குள்ள விழணும்னா விழுந்துடுவாங்க. அதுலயெல்லாம் என் தொண்டர்கள் கிட்ட யார்கிட்டேயும் மாற்றம் கிடையாது. விழு… தலைவர் சொல்லிட்டார். போடான்னு விழுந்துடுவாங்க. ஏன்னா தலைவரை பற்றித் தொண்டர்களுக்குத் தெரியாதா? அடுத்த தலைவர் மாதிரி இல்ல விஜயகாந்த். உங்களுடைய தொண்டர்களை அழுக விட்டுக்கிட்டு போகவிட மாட்டான். விஜயகாந்த் நல்லமனிதர் எங்களைக் காப்பாத்துவார்னு நினைக்கிறீங்க. அதை என்னைக்கும் காப்பாத்துவேன். (பின்பு பிரேமலதா சொல்வதைத் திரும்பிக் கேட்கிறார்)

‘‘கேரளா ஜால்ரா அடிக்கிறாங்க!”

 விஜயகாந்த் எப்பவுமே, இப்பகூட தனி ஒருவன்னு ஒரு படத்தைப் போட்டான். நானும் பிரேமலதாவும் பார்த்துக்கிட்டிருந்தோம். இவன்லாம் ஒரு முதலமைச்சரான்னு எனக்குக் கோவம் வந்துச்சு. தலைவர் தலைவர்னு சொல்கிறானே. அந்தப் பிரசவ வலியில துடிச்சிகிட்டு இருந்த அந்த அம்மாவை ஹாஸ்பிட்டல் கொண்டு போற நேரத்துல என் தொண்டர்கள் சாகக் கூடாது. அப்படி இப்படிங்​கறாரு. எல்லாருமே தலைவருக்காகத்தான் இருக்கும். தலைவர் நல்லா இருந்தா தொண்டர்களும் நல்லா இருக்க வேண்டும். விஜயகாந்த் வாழ்ந்தான்... வாழ்ந்தான்... வாழ்ந்தானே தவிர, விஜயகாந்த் ஏழை மக்களுக்காக வாழ்ந்தான்னுதான் இருக்கணும் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறேன். ஏன் இதைச் சொல்கிறேன். பத்திரிகைகாரங்க நேரடியா சொல்ல முடியாது. ஏன்னா பயம். ஜெயலலிதா எங்கயாவது அடிச்சிடுமா? ஜெயலலிதா போலீஸ், பத்திரிகை, ஓபிஎஸ். ஓ.பி.எஸ்ன்னா ஜீரோ. இந்த மூன்று பேரும் நம்மளை ஏன்னா நான் டி.வி-யைப் பார்ப்பேன். டி.வி-யில விழுந்து விழுந்து ஜெயலலிதாவைத்தான் காட்டுவாங்க. டி.வி-யில பாருங்க சம்பந்தப்பட்ட எந்த அதிகாரியும் வரமாட்டான். பத்திரிகை முழுக்க ஜால்ரா அடிக்குது. என்ன ஜால்ரா? கேரளா ஜால்ரா அடிக்குது. டி.வி-யில விழுந்து விழுந்து அந்த ரெண்டு சேனலும் ஜெயலலிதாவைக் காட்டுவாங்க. எங்களைப் போட்டு காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சுவாங்க. ஒரு அளவு வேண்டாம். ஒருசில பத்திரிகை தி.மு.க-வுக்கு ஜால்ரா அடிக்குது. நமக்கும் ஒரு பத்திரிகை ஜால்ரா அடிக்கணும்னு நினைக்கிறேன். அது தே.மு.தி.க-வுக்கு ஜால்ரா அடிக்கும். எந்தப் பத்திரிகை அடிக்கணும்னு தெரியல. பார்ப்போம். இல்லைன்னா அடிக்க வைக்கணும். இல்ல டி.வி-யை அடிக்க வைக்கணும்.

‘‘கிச்சன் கேபினெட்டுல பார்த்தேன்!”

 நெல்லு தஞ்சாவூர்ல அளக்கறதுக்கு லஞ்சம் கேட்கறாங்களாம். இவங்க 100 கிலோ அளக்கறதுக்கு ரெண்டு கிலோ எக்ஸ்ட்ரா போடுங்கறாங்களாம். 100 கிலோ போட்டு ஏதோ 10 ரூபாய் வாங்குறாங்களாம். கிலோ 5 ரூபாய் மூட்டைக்கு ரெண்டு கிலோ ஐந்தும் ஐந்தும் 10. மூட்டைக்கு என்னாச்சு. இது ஒரு பத்து... இது ஒரு பத்து மூட்டைக்கு மட்டும் 20 ரூபாய் கிடைக்குது. ஒரு ஆயிரம் மூட்டை வாங்கினா எவ்வளவு ஆச்சு? 2,000 ரூபாய்… தேவையா? தேவைதான். இல்ல 20,000 ரூபாயா? 2,000 இல்ல 20,000. நாம சொல்றோம் இல்ல நாலும் நாலும் எவ்வளவு?... எட்டு. அதுதான் கரெக்ட். ஆனால் குமாரசாமி கணக்குல, நாலும் நாலும் என்ன சொல்லுவான்? மூணுன்னு சொல்லுவான். அதான் பெங்களூர் குமாரசாமியின் கணக்கு. நாம எட்டுங்கறமே… அவர் மூணுன்னு சொல்றாறேன்னா… என்னடா கணக்குன்னா அதான் குமாரசாமியோட கணக்கு. இதை நான் சொல்லல. வாட்ஸ் அப்பில் சொல்றாங்கோ. இதை கிச்சன் கேபினேட்டில் பார்த்தேன். எனக்குத் தெரியாதுங்க “சொல்லிட்டாங்கோ..” அப்படீங்கறங்கோ, நானும் சொல்றேங்கோ, அப்படின்னா நீங்க நம்பணும்கோ, இதெல்லாம் உங்களுக்குத் தெரியும். ரேட்டை கூட்டணும்னு நெனைக்கறாங்க. என்ன பண்றது? மக்களுக்குப் பொழுதுபோகணும். சினிமா நடிகர்தானே அதனால நான் கே டி.வி பார்க்குறேன். அடுத்து இவங்க வாங்குறாங்க நீங்க பாருங்க. ரெண்டு டி.வி படாத பாடுபடும், நாலு டிவி படாத பாடுபடும், ரெண்டு, நாலு, எட்டு இல்ல. எத்தனை டி.வி இவங்களை சப்போர்ட் பண்ணுச்சோ, அது படாதபாடுபடும். அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் படாத பாடுபடும் என்பதை தெளிவாகச் சொல்றேன்.

‘‘இப்ப மணி என்ன?”

இப்ப நம்மள பத்திரிகைகாரங்க சொல்றாங்க விஜயகாந்த் கூட்டணி போயிடுவாரா? இல்ல போயிடுவார்… போயிடுவார்னு சொல்றாங்க. தலைவன் வேண்டாங்குறேன்… நீ ஏன் (திடீரென சுதாரித்துக் கொண்டவரைப்போல்) இல்ல சரிதான்… சரிதான்பா. கேட்குறாங்க பத்திரிகை நண்பர்கள்… நீங்க கேட்டீங்களா வேணாம்... வேணாம்... வேணாம்னு சொல்றாங்க. நீங்க எழுதுங்க தொண்டர்கள் வேண்டாங்கறாங்க. தொண்டர்களும் அந்த வழிதான் போவார்னு தலைவர்ன்றாங்க. தலைவர் எங்க இருக்கார்னு நீங்களே சொல்லுங்க. ஏன் இத்தனை பேரும்… நீங்க இப்ப வந்து மணி என்ன? ஏன்னா நீங்க வந்து பக்குவமா போகணும்? எல்லா ஊர் வண்டிக்கும் ஒரு சீஃப் இருப்பாங்க. அவங்ககிட்ட போய்ட்டு சண்ட இல்லாம சச்சரவு இல்லாம போகணும். தேசிய முற்போக்கு திராவிட கழகம்ன்னாலே கடையில தகராறு பண்ணாம ஒழுங்கா சாப்பிட்டமா வந்தமான்னு இருப்பாங்க. மத்த கட்சி மாநாடுன்னா கடையை இழுத்து மூடிடுவாங்க. யார்ரா இவன் சண்டையை போட்டுக்கிட்டே இருப்பான். அவன்கிட்ட போய் கடையைத் தொறந்து வச்சிகிட்டு இருக்கணும்? அதுக்கு சும்மா இருந்துகிட்டு போயிடலாம். வியாபாரமும் வேணாம் ஒண்ணும் வேணாம். ஆக, எதை எதை நாம் எப்படி வைக்கிறது?

‘கிங்’... ‘கிங்மேக்கர்’!

பிரேமா கிட்டயே நான் கேக்குறேன். ‘கிங் மேக்கரா’ இருக்கணுமா? ‘கிங்’கா இருக்கணுமா? சொல்லுங்க பார்க்கலாம். ‘கிங்’…  சரி ஒரு தடவை சொல்லீட்டீங்க. ரெண்டு தடவை கேட்பேன். ‘கிங் மேக்கரா’ இருக்கணுமா? ‘கிங்’கா இருக்கணுமா? காது கேட்கலையே… பத்திரிகைகாரங்களைப் பார்த்துச் சொல்லுங்க… ‘கிங்’கா இருக்கணுமா? சரி. நீங்களும் ‘கிங்’காதான் இருப்பீங்க. கவலையே படாதீங்க. நான் ‘கிங்’குன்னா நீங்களும் ‘கிங்’குதான். யாரும் இங்கே சர்வாதிகாரி கிடையாது. ஆக, எல்லோரும் நேரத்துக்குப் போகணும்... வீட்டுக்குப் போகணும்ங்கறதால. நாளைக்கு லீவு நாளா? மணி என்ன? ஒன்பதா? ஒன்பதாச்சா… எல்லோரும் பத்திரமா வீட்டுக்குப் போய்ச் சேர்ற வரைக்கும் எனக்குத் தூக்கம் வராது நண்பர்களே... தொண்டர்களே… நான் அதிக நேரம் பேசலேன்னு யாரும் வருத்தப்பட்டுக்காதீங்க. எனக்கு சில பிரச்னை இருந்தது. அதனால வண்டில உட்கார்ந்து அவங்ககிட்ட பேசி அனுப்பிட்டு வந்திருக்கேன். இந்த ஏவி எல்லாம் பார்த்திருப்பீங்க. இது வந்து முதல்தடவை. இதைப் பார்த்து காப்பியடிச்சு திருடத்தானே செய்யறாங்க. திருட திருட. என் மனைவி இதைப் பார்த்து வேற என்ன பொருள்ள என்ன பேரு வச்சி கூப்பிட்டாலும் திருடித்தான் அவங்க சொல்றாங்கன்னுதான் வரும். செஞ்சுபார்க்கட்டுமே. ஜெயலலிதா இன்னும் ரெண்டுமாசம். ரெண்டுமாசத்துல எதையும் செய்யமாட்டாங்க. குறைஞ்சது 5 வருஷம் ஆகும். 5 வருஷத்துல நிச்சயமாக நான் முடிக்கிறேன்னு சொல்லி முடிக்கிறேன். மக்களே வணக்கம்! நன்றி… நன்றி… நன்றி… வணக்கம்… வணக்கம்… வணக்கம்!”

- தெளிவா புரிஞ்சு போச்சுங்க! 

- பா.ஜெயவேல்
அட்டை மற்றும் படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick