பெரியோர்களே... தாய்மார்களே! - 66

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

டித்து புதுப்பிக்கப்பட்டு இன்று பிரமாண்டமாக திறக்கப்பட்டு உள்ளது கலைவாணர் அரங்கம். முன்பு அதற்கு,  ‘பாலர் அரங்கம்’ என்று பெயர். அதற்கும் முன்பு அந்த அரங்கத்தில் தமிழக சட்டமன்றம் சில காலம் செயல்பட்டது. 1954-ல் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்த இடத்தில்தான். இன்று மேலிடப் பார்வையாளர்களாக குலாம் நபி ஆசாத்தும், முகில் வாஸ்னிக்கும் வருவதைப் போல அன்று மேலிடப் பார்வையாளராக டெல்லியில் இருந்து வந்தவர்தான் பிற்காலத்தில் பிரதமராக வளர்ந்த இந்திரா காந்தி!

காமராஜருக்கு அரசியல் அனுபவம் உண்டு. ஆனால், நிர்வாக அனுபவம் இல்லை என்று அனைவரும் அப்போது கருத்துச் சொன்னார்கள். அரசியல் அனுபவமும் நிர்வாக அனுபவமும் கொண்ட ராஜாஜி, தனது அமைச்சரவையில் 17 பேரை அமைச்சர்களாக வைத்திருந்தார். நிர்வாக அனுபவம் இல்லாதவர், படிக்காதவர் என்று சொல்லப்பட்ட காமராஜர், ‘‘தனக்கு எட்டு அமைச்சர்களே போதும்’’ என்றார். அதிக திறன்கொண்ட சிலரால் எல்லாவற்றையும் திறம்படச் சாதிக்க முடியும் என்று காமராஜர் நினைத்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவராக தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார். சி.சுப்பிரமணியத்தை தலைவர் பதவிக்கு முன்மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார். தனது அரசியல் எதிரியான ராஜாஜி அமைச்சரவையில் இருந்த எம்.ஏ.மாணிக்கவேலு நாயகரையும் ராமநாதபுரம் ராஜா சண்முக ராஜேஸ்வர சேதுபதியையும் தனது அமைச்சரவை சகாக்களாக சேர்த்துக்கொண்டார். எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியின் உழைப்பாளர் கட்சியை காங்கிரஸோடு இணைத்து அவரையும் அமைச்சர் ஆக்கினார். தொழிலாளர் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமனுக்கு தொழில் துறையையும் தொழிலாளர் துறையையும் சேர்த்துக் கொடுத்தார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பி.பரமேஸ்வரனை இந்துசமய அறநிலையத் துறை அமைச்சராக்கி தமிழ்நாட்டு கோயில்களில் சாதி பார்த்து எந்த சமூகம் வெளியே நிறுத்தப்பட்டதோ அந்த சமூகத்தைச் சேர்ந்தவருக்கு முதல் மரியாதை செய்தார். பின்னர், கக்கனை உள்துறை அமைச்சர் ஆக்கினார். அதுவரை பெண்கள் யாரும் அமைச்சராக இருந்தது இல்லை. முதன் முதலாக லூர்து அம்மாள் சைமன் என்பவரை அமைச்சர் ஆக்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்