“அனிதா என் மனைவி... அனிதா என் காதலி!”

உரிமைகோரும் 10 இளைஞர்கள்

“அனிதாவும் நானும் அடிக்கடி வெளியூர் செல்வோம். கணவன், மனைவி என்று சொல்லி, அறை எடுத்துத் தங்குவோம். அங்கு, இருவரும் மது அருந்துவோம். சந்தோஷத்தில் திளைப்போம். இப்படியே குஷியாகப் போய்க்கொண்டிருந்தது. திடீரென ஒரு நாள் அனிதா​விடம் இருந்து எனக்கு போன் வந்தது. ‘நான் கர்ப்பமாக இருக்கிறேன்’ என்று  சொன்​னாள். எனக்குத் தலை கிர்ரென்று இருந்தது” என்றார் சென்னையில் ஐ.டி. கம்பெனி ஒன்றில் பணியாற்றும் ஓர் இளைஞர்.

“அனிதா எங்கே போக​வேண்டும் என்றாலும் என்​னோட கால் டாக்ஸியைத்​தான் புக் செய்வாள். முன் சீட்டில் உட்கார்ந்து என்னோடு சகஜமாகப் பேசிக்கொண்டு வருவாள். ஒருநாள் என்னிடம், ‘உங்களை லவ் பண்றேன்’ என்று சொன்னாள். எனக்கு ஜிவ்வென்று இருந்தது. அதன் பிறகு காரில் ஜாலியாகச் சுற்றினேன். அடிக்கடி எனக்கு கேசரி செய்துகொடுப்பாள். அதைச் சாப்பிட்​டவுடன் எனக்கு ஒரு மாதிரியாக இருக்கும். மூன்று மாதங்கள் அனிதாவின் கட்டுப்பாட்டில் இருந்தேன்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் நிஷாந்த்.

இந்த இரண்டு இளைஞர்கள் மட்டுமல்ல... இதுபோல 10 இளைஞர்கள், அனிதாவுடன் பழகிய அனுபவங்களை கதைகதையாகச் சொல்​கிறார்கள்.

யார் இந்த அனிதா?

அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் அனிதா. நடுத்தரக் குடும்பம். அங்குள்ள ஒரு கல்லூரியில் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த​போது, அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த குமாருடன் அனிதாவுக்கு காதல் ஏற்பட்டது. படிப்பு முடிந்து மார்க்கெட்டிங் வேலையில் சேர்ந்தார் குமார். பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். சென்னை தாம்பரத்தில் வசித்தனர். போகப்போக அனிதாவின் நடவடிக்கைகள் குமாருக்குப் பிடிக்கவில்லை. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்துப் பெற்றனர். அதன் பிறகு பெரும்பாக்கத்தைச் சேர்ந்த டிரைவர் சுரேஷ் என்பவருடன் காதல் ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்துகொண்டார் அனிதா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்