கழிப்பிடம் கட்டிய மக்கள்... இடித்துத் தள்ளிய அரசு!

இயற்கை உபாதைகளுடன் ‘ஏழைபடும் பாடு’!

‘‘எங்க ஏரியாவுல பாத்ரூம், டாய்லெட் வசதி கிடையாது. அதனால, நாங்களே எங்களோட சொந்தச் செலவில் கட்டினோம். ஆக்கிரமிப்பு இடம்னு சொல்லி அதை இடிச்சிட்டாங்க. அங்கே இரும்பு வேலி போட்டுட்டாங்க. இங்கே, 60 குடும்பங்கள் இருக்கு. நிறைய பொம்பளைங்க இருக்கோம். ஒண்ணுக்கு, ரெண்டுக்குப் போறதுக்கு நாங்க படுற அவஸ்தைகளை வெளியே சொல்ல முடியாது. நாங்க வீட்டு வேலை செய்யிற தொழிலாளிங்க. அடக்கி வெச்சிருந்து, வேலைக்குப் போற இடத்துலதான் ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போகவேண்டி இருக்கு. ராத்திரி 11 மணிக்கு மேல ஒதுக்குப்புறமா போய் முந்தானையால முகத்தை மூடிக்கிட்டுப் போறோம். வயசானவங்க, சின்ன பொண்ணுங்க எல்லாருக்கும் எவ்ளோ கஷ்டம் தெரியுமா சார்” என்று கண்ணீர் வடிக்கிறார்கள், சென்னை விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் பகுதிப் பெண்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்