“செத்துப்போனதா சொல்லிட்டாங்க!”

சுனாமி சுழற்றியடித்தவரின் கண்ணீர் கதை

சுனாமி என்கிற ஆழிப்பேரலைத் தாண்டவம் ஆடிச்சென்று 10 ஆண்டுகள் கடந்தும், மனிதர்களிடம் அது ஏற்படுத்தியத் தடங்கள் ஆழப்பதிந்து வலியைத் தந்துகொண்டிருக்கின்றன. அந்த வலியின் வேதனையில் இருப்பவர்களில் சண்முகவேலுவும் ஒருவர். சுனாமியால் செத்துப்போனதாக அதிகாரிகள் அலட்சியமாக பதிவுசெய்ததால் 10 ஆண்டுகள் கடந்தும் உரிய நிவாரணம் கிடைக்காமல் அல்லல்படுவதாகத் தகவல் கிடைத்தது. அவரைச் சந்தித்தோம்.

“எனக்கு நெல்லை மாவட்டம். மனைவி, இரண்டு பொம்பளப் புள்ளைங்க. ஒரு பையன். இதுதான் என் குடும்பம். குடும்பத்தைக் கரையேத்தணும்னு மெட்ராஸ் வந்தேன். கானாத்தூர் ரெட்டிக்குப்பம் ஏரியால மீனவர்களோட சேர்ந்து வலை இழுக்குற வேலை பார்த்துட்டு இருந்தேன். அன்று காலைல வேலைக்குக் கிளம்பற நேரத்துல ஒரு பெரிய அலை கரையை நோக்கி வந்துச்சு. வீட்டுக்கு ஓடிப்போய் புள்ளைங்களோட சான்றிதழ், வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு இருந்த சூட்கேஸை எடுத்துட்டு வெளிய வர, இன்னொரு பெரிய அலை வந்தது மட்டும்தான் ஞாபகம் இருக்கு. அதுக்கு அப்புறம் என்ன நடந்ததுனு எதுவும் தெரியல.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்