கழுகார் பதில்கள்!

மு.நடராஜன், திருப்பூர்-3.

 பிரதமரின் திடீர் பாகிஸ்தான் பயணம் குறித்து?


  இந்தியா - பாகிஸ்தான் அதிகாரிகள் மட்டத்தில் ரகசியமாகப் பேசும்போதே சர்ச்சை கிளம்பியது. இப்போது ‘‘பாகிஸ்தான் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லப் போனேன், அவரது பேத்திக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது’’ என்று ஏதேதோ காரணம் சொல்கிறார்கள். இந்த மாதிரி காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் போயிருந்தால், பி.ஜே.பி-யினர் குய்யோ முறையோ என்று குதித்திருப்பார்கள். தேசம் போய்விட்டது, நாடு போய்விட்டது என்று கதறுவார்கள். இப்போது தேசபக்தர்களே செய்வதால், எதுவும் தவறு இல்லை என்று ஆகிவிட்டது.

மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.

 ஸ்டாலினின் வேகம், விவேகம் எப்படி இருக்கிறது?


 மழைக்கு முன்னதாக வேகமாக இருந்தார் ஸ்டாலின். தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று படபடப்பவராக இருந்தார். இப்போது விவேகம் காரணமாக அமைதியாகிவிட்டார். தேர்தலுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பதாகத் தெரிகிறது.

கூப்பர்டீனோ, கலிபோர்னியா.

 உளவுத் துறை அதிகாரி டேவிட்சன் அதிரடியாக மாற்றப் பட்டதன் பின்னணி என்ன?


 உண்மையை மறைக்காமல் சொல்பவர்களை யார் அருகில் வைத்திருப்பார்கள்? பிடித்த மானதைச் சொல்பவர்களுக்குத்தானே பதவி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்